முத்தக்காட்சிகளில் நடிப்பதற்கு என் அப்பா எதிர்க்கவில்லை: அலியா பட்
மும்பை: முத்தக் காட்சிகள் உள்ளிட்ட நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து என் தந்தை ஒன்றும் கூறுவதில்லை என தெரிவித்துள்ளார் நடிகை அலியா பட்.
பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகள் நடிகை அலியா பட். இவர் தற்போது பிரபல நாவலை மையமாகக் கொண்டு தயாராகி வரும் '2 ஸ்டேட்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகன் அர்ஜூன் கபூருடன் நாயகியான அலியா நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன. இப்படம் வரும் ஏப்ரல் 18ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து அலியா பட்டிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதிலாவது:-

நெருக்கமான காட்சிகள்...
நான் திரைபடங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து என் தந்தை ஒருபொருட்டாக எடுத்துகொள்ளமாட்டார்.

முத்தக் காட்சி...
எனது அடுத்தபடமான 2 ஸ்டேட்ஸ் என்ற திரைபடத்தில் அர்ஜீன் கபூர் ஒரு காட்சியில் உதடுட்டோடு உதடு முத்தமிடுவது படம் ஆக்கபட்டது.இது குறித்து என் தந்தை ஒன்றும் கூறவில்லை.

அப்பா படங்களில் கூட...
நான் என் தந்தையின் படக்களில் இது போன்ற காட்சிகளை பார்த்து இருக்கிறேன்.

நான் நடிகை மட்டும் தான்...
படத்தில் நடிக்கும் போது நான் இன்னாரது மகள் தான் என்று சொல்லிகொள்ள விரும்பவில்லை இதில் நான் ஒரு நடிகை மட்டும் அவ்வளவுதான்.

தந்தைக்கு பாதிப்பில்லை....
இது போன்ற காட்சிகளில் நடிப்பது குறித்து எனது தந்தைக்கு எந்த பாதிப்பு இல்லை என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











