உங்க சைஸுக்கு டிரெஸ் கிடைக்கலையா.. குட்டி உடையில் சுற்றும் சாக்‌ஷி.. விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Recommended Video

உங்க சைஸுக்கு டிரெஸ் கிடைக்கலையா.. குட்டி உடையில் சுற்றும் சாக்‌ஷி.. விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல பிரபலங்களும், சமூக வலைதளங்களில் தங்களுக்கான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வருகின்றனர்.

மீரா மிதுன், யாஷிகா ஆனந்தை தொடர்ந்து நடிகை சாக்‌ஷி அகர்வாலும் தொடர்ந்து ஹாட் போட்டோக்களாக போட்டு இன்ஸ்டா ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

உடற்பயிற்சியில் நாட்டம்

உடற்பயிற்சியில் நாட்டம்

பொதுவாக தங்களது உடம்பை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள பல நடிகைகளும், உடற்பயிற்சியை தினமும் இடை விடாது கடைபிடித்து வருகின்றனர். நடிகை சாக்‌ஷி அகர்வாலும் இந்த லாக் டவுன் நேரத்திலும், வீட்டிலேயே எப்படி எல்லாம் வித விதமாக உடற்பயிற்சி செய்யலாம் என்பதை அடிக்கடி தனது ரசிகர்களுக்கு வீடியோ போட்டு சொல்லி வருகிறார்.

படு கிளாமராக

படு கிளாமராக

ராஜாராணி படத்தில் மேக்கப் போடாமல் வீட்டில் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக காட்டும் பெண்ணாக சாக்‌ஷி அகர்வால் நடித்திருப்பார். பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்‌ஷி, அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, எப்படியாவது முன்னணி நடிகையாக மாற வேண்டும் என தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களாக பதிவிட்டு தள்ளுகிறார்.

ஜெனிஃபர் லோபஸ் சேலஞ்ச்

ஜெனிஃபர் லோபஸ் சேலஞ்ச்

ஹாலிவுட் பிரபலம் ஜெனிஃபர் லோபஸின் பவுல் சேலஞ்ச் உலகம் முழுவதும் டிரெண்டானது. பாலிவுட் நடிகை திஷா பதானி, கோலிவுட் நடிகை சாயிஷா என பல ஹீரோயின்கள் அந்த சவாலை செய்திருந்த நிலையில், சாக்‌ஷி அகர்வாலும், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜெனிஃபர் லோபஸ் பாடலுக்கு நடனமாடி இருந்த வீடியோ வைரலானது.

உன்னால் முடியும்

உன்னால் முடியும்

இந்நிலையில், தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில், பிங்க் நிற டாப் மற்றும், குட்டி ஷார்ட்ஸ் அணிந்த படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், "யாராலும், திரும்பிப் போய் ஆரம்ப நிலையை மாற்ற முடியாது, ஆனால், எங்கு இருக்கிறோமோ அந்த இடத்தில் இருந்தே இப்போது இருந்தே முயற்சி செய்தால் நிச்சயம், இறுதியில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு பண்ண முடியும்" என பதிவிட்டுள்ளார்.

உங்க சைஸுக்கு

உங்க சைஸுக்கு

காலையில் எழுந்தவுடன் மேக்கப் இல்லாத முகத்துடன் பளிச்சென இருப்பதாக போட்டோ போட்டுள்ள நடிகை சாக்‌ஷி அகர்வாலின் இந்த புகைப்படத்தை பார்த்து காண்டான ஒரு நெட்டிசன், "உன் சைஸுக்கு டிரெஸ் கிடைக்கலையா.. எப்ப பார்த்தாலும், சின்ன புள்ளைங்க டிரெஸ் வாங்கி போடுற" என பங்கமாக கலாய்த்துள்ளார்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

தொடர்ந்து தீவிரமான உடற்பயிற்சியை செய்து நன்றாக உடற் தோற்றத்தை மாற்றி இருக்கிறீர்கள் சாக்‌ஷி, இது நல்ல முன்னேறம் என்றும் சில ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். மேலும், சிலர், வழக்கம் போல, ஹாட்டாக இருக்கிறீர்கள் என்று ஜொள்ளு வடித்தும், தொப்புளை காட்டுவதே வேலை என விளாசி தள்ளியும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X