'அசின் ஸ்டைல் எனக்கு வேணாம்...' - சிணுங்கும் பூர்ணா

'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' பட விழாவில் நடிகர் விஜய் ஆரம்பித்து வைத்தது இந்த அசின் ஒப்பீடு.
இதுபற்றி பூர்ணா கூறுகையில், "எங்கே போனாலும், நீங்க அசின் மாதிரியே இருக்கீங்கன்னு ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்கிறார்கள். முதல்ல பெருமையாத்தான் இருந்தது. வெளிப்புற படப்பிடிப்புக்கு செல்லும் போது அசின் வந்திருக்காங்கன்னு எல்லோரும் பார்க்க வருகிறார்கள்.
அசினை ஒரு விழாவில் சந்தித்தபோது நீங்க என்னை மாதிரியே இருக்கீங்கன்னு சொன்னாங்க.
ஆனால் அது மட்டுமே போதாதல்லவா. நடிப்பில் எனக்குன்னு தனி ஸ்டைல் வேணும்னு நினைக்கிறேன். அப்போதுதான் அடுத்து வருகிறவர்கள் இவங்க பூர்ணா மாதிரி நடிக்கிறாங்கன்னு சொல்லுவார்கள். அதைத்தான் நான் விரும்புகிறேன். அதனால இனி என்னை அசினோட ஒப்பிட வேணாம்.
நான்அதிக படங்களில் நடிப்பதாக சொல்கிறார்கள். கதையை தயார் செய்து இதில் பூர்ணா நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர்கள் முடிவு செய்கிறார்கள். நான் கதை கேட்டு பிடித்திருந்தால் நடிக்கிறேன். இதில் எனக்கும் திருப்தி. என்னை நம்புகிறவர்களுக்கும் திருப்தி.
எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து முடித்து இனிமே நடிப்பதற்கு கேரக்டர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு எனக்கு சினிமா வாய்ப்புகள் இல்லையே. இதோ இப்போதுதான் வந்திருக்கிறேன். பெயருக்கு நாலு படம்தான் என் முகவரி.
கிளாமர் என் உடம்புக்கு சரியாக வருமா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. கிளாமர் ஆசை இருந்தால் நிச்சயம் செய்வேன். ஆனால் இப்போது இல்லை. ரசிகர்களுக்கு என் நடிப்புதான் நினைவுக்கு வர வேண்டும். என் உடம்பு ஞாபகத்துக்கு வரக் கூடாது என ஒரு கொள்கை வச்சிருக்கேன்.
சின்ன வயதில் இருந்தே டான்ஸ் என்றார் எனக்கு உயிர். சினிமா வாய்ப்புகள் இல்லாத நேரங்களில் விழாக்களில் டான்ஸ் ஆடுவதுதான் என் பொழுதுபோக்கு. டான்ஸ் முக்கியமாக வைத்து படம் உருவானால் உடனே கால்ஷீட் கொடுக்க ரெடி. சீக்கிரமே அந்த வாய்ப்பை தாருங்கள்", என்கிறார் பூர்ணா.


Click it and Unblock the Notifications











