ஸ்ரீரெட்டியையெல்லாம் பெரிய ஆளாக்காதீங்க.. நம்பர் நடிகை அதிரடி!
தொடர்ந்து தெலுங்கு, தமிழ் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் ஸ்ரீரெட்டியை பெரிய ஆளாக்கா வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தொடர்ந்து தெலுங்கு, தமிழ் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் ஸ்ரீரெட்டியை பெரிய ஆளாக்கா வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஸ்ரீலீக்ஸ் என தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் என பலரும் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக்கொண்டதாக கூறினார்.
அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். நடிகை திரிஷா மீதும் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்,.

பாலியல் குற்றச்சாட்டு
இதைத்தொடர்ந்து சென்னை வந்த அவர் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.

மூத்த நடிகைகள் எதிர்ப்பு
இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீரெட்டியின் தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த நடிகையான லதா, மற்றும் கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திரிஷா கருத்து
பாரதி ராஜா உள்ளிட்ட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகையான திரிஷா, ஸ்ரீரெட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பதில் சொல்ல முடியாது
அதாவது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரிஷாவிடம், ஸ்ரீரெட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திரிஷா அளித்த பதிலாவது, இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

பெரிய ஆளாக்க வேண்டாம்
ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. ஸ்ரீரெட்டியையெல்லாம் பெரிய ஆளாக்கவேண்டாம். இவ்வாறு காட்டமாக கூறினார் திரிஷா.


Click it and Unblock the Notifications











