நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை- பிரபு தேவா

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்துவிட்டது. இதுவரை பத்திரிகைச் செய்தியாக இருந்ததை, நயன்தாராவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.
"பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டு கொடுத்தேன். நான் 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் பிரபு தேவா இல்லை. அதனால் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் தற்போது முறிந்து விட்டது. பிரபு தேவா துரோகம் செய்துவிட்டார்," என்று பேட்டியளித்திருந்தார் நயன்.
இதற்கு தற்போது பதிலளித்துள்ளார் பிரபுதேவா. அவர் கூறுகையில், "என்னைப்பற்றி நிறைய செய்திகள் வெளி வருகின்றன. நான் எதையும் பாராதது போல, கேளாதபோல் இருக்கிறேன்.
எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியும். என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். வெளிப்படையாக இந்த வதந்திகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியும். ஆனால் சிலர் மனது காயப்படும் என்பதால் அப்படி செய்யவில்லை. இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன்.
நடந்த விஷயங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவை என் சொந்த விஷயங்கள். காதல் பற்றி நான் எது சொன்னாலும் அது செய்தியாகிவிடும். இந்த விஷயங்களை வெளிப்படையாக பேசாததற்காக எனது ரசிகர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இக்காட்டான நேரத்தில் தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும். அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











