ரஜினிக்கு தங்கையாக நடிக்க விருப்பமில்லை-மாதுரி தீக்ஷித்

By Shankar

Madhuri Dixit
ரஜினியின் தங்கையாக நடிக்கச் சொன்னதால், ராணா படத்தில் நடிக்காமல் விட்டுவிட்டேன் என நடிகை மாதுரி தீக்ஷித் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்ட அவர், தற்போது தனக்குப் பிடித்தமான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதற்கு வந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. இந்த தகவலை ஏற்கெனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம். தனது குழந்தைகளை அதிக நாட்கள் பிரிய வேண்டியிருக்கும், குடும்பம் முக்கியம் என்பதால் ராணா வாய்ப்பை ஏற்கவில்லை என்று மாதுரி தீக்ஷித் முதலில் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது, ராணாவில் ரஜினிக்கு தங்கை வேடம் என்பதால் ஏற்க மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் இணைய தளத்தில் மாதுரி தீட்சித், "ரானா படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அது அவருடைய தங்கை வேடம். அந்த வேடம் எனக்கு ஏற்றதாக இல்லாததால் மறுத்து விட்டேன்.

ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிப்பதை விரும்புகிறேன். ஆனால் சரியான வேடத்துக்காக காத்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

மாதுரி தீட்சித், கடந்த 1987-ம் ஆண்டில் வெளிவந்த உத்தர் தக்ஷின் என்ற படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜலக் திக்காலா ஜா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாதுரி தீட்சித் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

ரஜினி நடிக்கும் புதிய படமான ரானா, வரலாற்று பின்னணியை கொண்ட ஆக்ஷன் தமிழ்ப் படம். தீபிகா படுகோனே, சோனு சுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது. ஆக்கர் பிக்சர் நிறுவனமும், ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ரானா தமிழில் தயாராகும் அதே சமயத்தில் இந்தியிலும் தயாரிக்கப்படுகிறது. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது. 2012-ல் இந்தப் படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X