ஏஐ நான்சென்ஸ்.. இவ்ளோ வக்கிரம் புடிச்சு அலைகிறீர்களே.. சப்புன்னு அறைந்த ஸ்ரீலீலா!
சென்னை: சினிமா நடிகைகளையும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களையும் தொடர்ந்து டீப் ஃபேக் ஏஐ எடிட் மூலம் சில வக்கிரம் பிடித்தவர்கள் டார்கெட் செய்து ஆபாசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நிலையில், நடிகை ஸ்ரீலீலா தனது ஏஐ புகைப்படங்களால் ரொம்பவே டென்ஷன் ஆகி ஏஐ எடிட்டுகளுக்கு எதிரான வன்மையான கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா தொடங்கி தொடர்ந்து பல முன்னணி நடிகைகளும் ஏஐ போட்டோக்கள் மற்றும் வீடியோக்களால் ரொம்பவே மனவேதனையில் வாடி வதங்கி வருகின்றனர். சினிமாவில் நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதை தாண்டி தற்போது நடிகைகளை எந்தளவுக்கு மோசமான ஆபாச கோணங்களில் பார்க்க வேண்டுமோ நெட்டிசன்களே எடிட் செய்து அதை அதிகளவில் வைரலாக்கியும் வருகின்றனர்.

சமீபத்தில், நடிகை ஸ்ரீலீலா, தமன்னா உள்ளிட்ட டாப் நடிகைகள் டவலுடன் கவர்ச்சியாக குளித்தது போன்ற தத்ரூப ஏஐ போட்டோக்கள் தான் ஸ்ரீலீலாவின் இந்த கோபத்துக்கு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஸ்ரீலீலா காட்டம்: சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் அனைவரையும் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன், தொழில்நுட்ப வளர்ச்சியை நல்லதுக்கு பயன்படுத்துங்க, அதை விட்டு விட்டு நான்சென்ஸான ஏஐ எடிட்களை செய்வதை உடனடியாக நிறுத்துங்கள், ஒவ்வொரு பெண்ணும் யாரோ ஒருவருடைய மகள், பேத்தி, அக்கா, தங்கை, தோழி என்பதை மறந்துவிட வேண்டாம்.
சினிமாவில் வேலை செய்யும் பெண்கள் மற்றவர்களை மகிழ்விக்கவே நடிக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அவர்களை அப்யூஸ் செய்வது போன்ற வேலைகளை செய்யும் கோழைகள் அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். வேலை நிமித்தமாக சோஷியல் மீடியா உள்ளிட்டவற்றை நான் சிறிது காலம் பார்க்கவில்லை. இதுபற்றி என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்த எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். என்னை போலவே சக நடிகைகளும் இந்த ஆபாச ஏஐ எடிட்களால் மனதளவில் பெரிய பாதிப்பை சந்தித்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
என்னுடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எங்களை போன்றவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதுபோன்ற ஆபாசமான ஏஐ எடிட்களுக்கு ஒரு போதும் துணை போக வேண்டாம் என நடிகை ஸ்ரீலீலா காட்டமான பதிவையும் அவசியமான பதிவையும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications