கேப்டனுக்கு ஷெரில் பின்டோ
| Click here for more images |
படத்தின் கதைப்படி (கேப்டன் பட சாஸ்திரப்படியும்) இரட்டை ஹீரோயின் என்றாலும் ஒரு ஹீரோயினை மட்டும் புக் செய்துவிட்டு சூட்டிங்கைத் தொடங்கினார் டைரக்டர்.
கனடா பக்கம் போய் வாரக்கணக்கில் படப்பிடிப்பை நடத்திவிட்டு வந்தனர்.
இந் நிலையில் இரண்டாவது ஹீரோயினுக்கு வலை வீசினர். நவ்நீத்தை தெலுங்கில் இருந்து இழுத்துவந்துவிட்ட நிலையில் இன்னொரு ஹீரோயினுக்காக மும்பை மாடல்கள் வட்டாரத்தில் நூல் விட்டுத் தேடினர்.
அப்படியாக சிக்கியவர் தான் ஷெரில் பின்டோ. ஏதோ ஹாலிவுட் நடிகை என்று நினைத்து விட வேண்டாம். இவர் நம் ஊர் தான். கொங்கனிப் பெண்ணான இவர் மங்களூர்காரராம்.
மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தவராம்.
இயக்குனர் மாதேஷ் இவருக்கு ஸ்கிரீன் டெஸ்ட் வைத்து தான் தேர்வு செய்தாராம். தான் நடிக்கும் முதல் படத்திலேயே கேப்டனோடு நடிக்க போகிற சந்தோஷத்தில் உச்சி குளிர்ந்து போயிருக்கிறார் பின்டோ.
இந்த படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடிக்கும் நவ்னீத் கெளர் அவர் மனைவியாக நடிக்கிறாராம். ஆனால் பின்டோவுக்கு வேறு வேடமோ தெரியவில்லா.
மோஸ்ட்லி கேப்டனை ஒருதலைப்பட்சமாக காதலிக்கும் ஹீரோயினாகத்தான் இருக்கும்.
காதலிங்கோ காதலிங்கோ...


Click it and Unblock the Notifications











