Dragon: கயாடு லோஹரை கல்யாணம் பண்ணனுமா?.. அப்போ இந்த செக் பாக்ஸஸை கண்டிப்பா ஃபில் பண்ணனுமாம்!

சென்னை: 2000ம் ஆண்டு பிறந்து கரெக்ட்டா 24 வயதே ஆகும் இளம் ஹீரோயின் தான் டிராகன் படத்தில் நடித்த கயாடு லோஹர். அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் கன்னடத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான முகில்பெட்டே படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்தொன்பதாம் நூட்டாண்டு படத்தில் நங்கேலி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர் தான் கயாடு லோஹர்.

மேலாடை அணியாமல் படம் முழுக்க டாப்லெஸ் ஆக நடித்து தனது 2வது படத்திலேயே நடித்த கயாடு லோஹர் அதன் பின்னர், தெலுங்கில் அல்லூரி, மராத்தியில் ஐ பிரேம் யூ மீண்டும் மலையாளத்தில் ஒரு ஜாதி ஜாதகம் உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது தமிழில் டிராகன் படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார்.

Dragon Kayadu Lohar heroine

அனுபமா பரமேஸ்வரன் பிரதீப் ரங்கநாதனை பிரேக்கப் செய்து பிரிந்த பின்னர், அவருக்கு வீட்டில் பார்க்கும் பெண்ணாக வரும் கயாடு லோஹர் ஒரு நாள் நைட் டேட் செல்ல வேண்டும் என ஹீரோவை அழைத்துக் கொண்டு பாருக்கு சென்று சில செக் பாக்ஸ்களை டிக் செய்யும் காட்சிகள் இன்றைய இளம் பெண்களுக்கான காட்சியாகவே வைத்தேன் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.

Dragon Kayadu Lohar heroine

கயாடு லோஹரை கல்யாணம் பண்ணனுமா?: பொதுவாக இளம் நடிகைகள் வந்தாலே தங்களுக்கு யாரும் ஆளில்லை என்றும் எங்களை திருமணம் செய்துக் கொள்ள இளைஞர்களுக்கு இந்த குணங்கள் எல்லாம் வேண்டும் என சொல்வது வாடிக்கையான விஷயம் தான். 24 வயது இளம் புயல் கயாடு லோஹர் சமீபத்தில் அளித்த பேட்டியில், டிராகன் படத்தில் வருவதை போலவே உங்களை திருமணம் செய்துக் கொள்ள மணமகனிடம் என்னவெல்லாம் குணங்கள் இருக்க வேண்டும் என செக் லிஸ்ட் பண்ணுவீங்க என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.

Dragon Kayadu Lohar heroine

கயாடுவின் கண்டிஷன் இதுதான்: தன்னை மட்டுமே ரொம்ப அளவுக்கு அதிகமாக கவனம் செலுத்தி நேசிக்கக் கூடிய நபரைத்தான் திருமணம் செய்துக் கொள்வேன் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். மற்றவர்கள் மீது கொஞ்சம் கூட அன்பு போகக் கூடாதாம். அதன் பின்னர், ஹானஸ்ட்டாக இருக்க வேண்டும் என்றும் தனக்காக டோர் திறந்து விடுவது, சேவகம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

கலாய்த்த பிரதீப்: ஒரு வெயிட்டர் மாதிரி இருக்கணும்னு மொத்ததில் சொல்லுங்க என கூடவே இருந்த பிரதீப் ரங்கநாதன் கலாய்க்க, இவருக்கு எல்லாம் அது சொன்னா புரியாதுங்க எனக் கூறிவிட்டார் கயாடு லோஹர். டிராகன் படத்தைத் தொடர்ந்து அடுத்து அதர்வா முரளி நடித்து வரும் இதயம் முரளி படத்திலும் இவங்க தான் ஹீரோயின். இந்த படத்தில் பிரதீப்புடன் கயாடு சேராத நிலையில், இதயம் முரளி படத்திலும் ஹீரோவுக்கு அல்வாதானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Dragon Kayadu Lohar heroine

இளைஞர்களின் கிரஷ்: ராஷ்மிகா மந்தனா எல்லாம் கீதா கோவிந்தம் படத்தின் போது இளைஞர்களின் கிரஷ்ஷாக மாறினார். ஆனால், இன்றைக்கு கோலிவுட்டில் இளைஞர்களின் கிரஷ் என்றால் அது நம்ம கயாடு லோஹர் தான் என்கின்றனர். அவர் நடித்த பழைய படங்களை பார்ப்பது அவரது இன்ஸ்டாகிராமை பின் தொடர்வது என ஏகப்பட்ட அட்ராசிட்டிகளை ரசிகர்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X