2025ன் கனவுக்கன்னி யார்?.. கோலிவுட்டில் குதிக்க காத்திருக்கும் டாப் 5 நடிகைகள் இவங்க தான்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் புதுப்புது நடிகைகள் இம்போர்ட் செய்யப்பட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் கனவுக்கன்னிகளாக மாறுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பலரது மனங்களை அதிகம் கொள்ளை கொண்டவர் என்றால் அது நம்ம கோட், லக்கி பாஸ்கர் படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரி தான்.

மாளவிகா மோகனன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், திஷா பதானி, ராஷ்மிகா மந்தனா என ஏகப்பட்ட நடிகைகள் கடந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்திய நிலையில், அந்த வேலையை 2025ல் செய்ய இன்னும் பலர் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.

new year 2025 year ender 2024 heroine 2025

இந்த ஆண்டு பல இளம் நடிகைகள் கோலிவுட் பக்கம் படையெடுக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவரப்போகும் டாப் 5 நடிகைகள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

5. கயாடு லோஹர்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் LIK திரைப்படம் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அதற்கு முன்னதாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்து வந்தாலும் இன்னொரு ஹீரோயினாக கோலிவுட்டுக்கு மலையாள திரையுலகில் இருந்து பார்சல் ஆக காத்திருக்கும் கயாடு லோஹர் நிச்சயம் ட்ரீம் கேர்ளாக மாறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

new year 2025 year ender 2024 heroine 2025

4. ருக்மிணி வசந்த்: ராஷ்மிகா மந்தனாவை போல கன்னடத்தில் இருந்து இன்னொரு புது வரவு ரசிகர்களை இந்த ஆண்டு வசீகரிக்க காத்துக் கொண்டிருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ படம் மூலம் ஏகப்பட்ட தென்னிந்திய ரசிகர்களை வசீகரித்த ருக்மிணி வசந்த் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் ஏஸ் படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

new year 2025 year ender 2024 heroine 2025

3. கியாரா அத்வானி: லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் இருந்தே கியாரா அத்வானி மீது தேசியளவில் ரசிகர்களுக்கு கிரஷ் இருக்கிறது. வரும் பொங்கலுக்கு ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் மூலம் ஆரம்பத்திலேயே கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை கண்டிப்பாக தன் பக்கம் கியாரா அத்வானி திருப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் சுமார் 92 கோடிகள் செலவு செய்து கேம் சேஞ்சர் படத்தின் பாடல்களை செதுக்கியுள்ள நிலையில், கியாரா அத்வானியை எப்படியெல்லாம் காட்டியிருப்பார் என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது.

new year 2025 year ender 2024 heroine 2025

2. பூஜா ஹெக்டே: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ மற்றும் தளபதி 69 என இரண்டு பெரிய படங்களில் கமிட்டாகியுள்ள நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஆண்டு கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாற காத்திருக்கிறார். கோலிவுட்டில் இதுவரை அவர் நடித்த ஒரு படமும் ஓடாத நிலையில், இந்த ஆண்டு அவரது ராசி எப்படி இருக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் புரமோஷனுக்காக இன்ஸ்டாகிராமில் அவர் கவர்ச்சி பொங்க போஸ்ட் போட்டு ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறப்போவது மட்டும் உறுதி.

new year 2025 year ender 2024 heroine 2025

1. த்ரிஷா: கடந்த ஆண்டு விஜய்யின் கோட் படத்தில் மட்ட பாடலுக்கு மஞ்சள் சேலையை அணிந்துக் கொண்டு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா இந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், ஐடென்டிட்டி, விஸ்வம்பரா என வரிசையாக பல படங்கள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மீண்டும் கவர காத்திருக்கிறார். 2025ம் ஆண்டு த்ரிஷாவோட ஆண்டாக அமையுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X