For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  2020ல் தமிழ் இளைஞர்களின் மனங்களை கொள்ளைக் கொள்ளப்போகும் கனவுக் கன்னி யார்?

  |

  சென்னை: 2020ம் ஆண்டு பிறந்து விட்டது. 2019ம் ஆண்டு போலவே 2020ம் ஆண்டும் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வரிசைக் கட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்க காத்திருக்கிறது.

  அதுபோலவே, தமிழ் இளைஞர்களின் மனங்களை கொள்ளைக் கொள்ள புதிய நடிகைகள் பலர் இந்த ஆண்டு படையெடுக்க உள்ளனர்.

  ஏற்கனவே தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கனவுக் கன்னியாக இருக்கும் நடிகைகளும் இந்த ஆண்டு அந்த போட்டியில் களம் காணுகின்றனர்.

  இதனால், 2020ம் ஆண்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கப் போகும் அந்த கனவு கன்னிகள் யார் யார் என்பதை இங்கே காண்போம்.

  ஃபுல் ஓப்பன் டிரெஸ்சில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரியங்கா சோப்ரா.. வைரலாகும் வீடியோ!ஃபுல் ஓப்பன் டிரெஸ்சில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரியங்கா சோப்ரா.. வைரலாகும் வீடியோ!

  நயன்தாரா

  நயன்தாரா

  பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக கலக்கி வரும் நடிகை நயன்தாரா, இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். இந்த ஆண்டும் இளைஞர்களின் கனவுக் கன்னியாக நயன்தாரா ஜொலிப்பார் என்பது உறுதி.

  2019 ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை யார்? ஓட்டு போட்டு ஆதரவ கொடுங்க!

  மாளவிகா மோகனன்

  மாளவிகா மோகனன்

  கடந்த ஆண்டு பேட்ட படத்தில் அறிமுகம் ஆனாலும், இந்த ஆண்டு வெளியாகவுள்ள மாஸ்டர் படம் தான் மாளவிகா மோகனனுக்கு கோலிவுட்டில் ரியல் என்ட்ரி என்று சொல்ல வேண்டும். தளபதி ரசிகர்கள் தொடர்ந்து செலுத்தி வரும் பேரன்பில் பூரித்து வரும் மாளவிகா மோகனன் இந்த ஆண்டு நிச்சயம் தமிழ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பார்.

  த்ரிஷா

  த்ரிஷா

  ராங்கி, பரமபதம், சதுரங்க வேட்டை 2 என த்ரிஷா நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. ஜெஸ்சி, ஜானு போல த்ரிஷா இந்த ஆண்டும் ஒரு சூப்பரான ரோலில் நடித்தால், இளைஞர்களை அவர் பக்கத்திலிருந்து மற்ற எந்த நடிகையாலும் திசை திருப்ப முடியாது.

  கீர்த்தி சுரேஷ்

  கீர்த்தி சுரேஷ்

  தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 7 படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன. தலைவர் 168 படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், மிஸ் இந்தியா என்ற தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியாகும் படத்திலும் பட்டையை கிளப்ப உள்ளார்.

  அமலா பால்

  அமலா பால்

  2019ம் ஆண்டு ஆடை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை திணறடித்த நடிகை அமலா பால், நடிப்பில் டிசம்பர் 27ம் தேதி அதோ அந்த பறவை போல படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியில் அந்த படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் அமலா பாலின் அடுத்த அதிரடி வெளியாகும் என தெரிகிறது.

  மெஹ்ரின் பிர்ஸடா

  மெஹ்ரின் பிர்ஸடா

  பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனுஷின் பட்டாஸ் படத்தில் தனது கவர்ச்சியிலும் க்யூட்னஸிலும் ஸ்கோர் செய்துள்ளார் மெஹ்ரின். தமிழ் சினிமாவுக்கு புது வரவாக வரவுள்ள மெஹ்ரின் பிர்ஸடா நிச்சயம் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஹன்சிகா

  ஹன்சிகா

  தமிழ் ரசிகர்களின் பப்ளி கேர்ளான ஹன்சிகாவுக்கு சமீப காலமாக சரியாக படங்கள் அமையவில்லை. இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியாகவுள்ள மஹா படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. சிம்புவுடன் ஏற்பட்ட காதல் பிரேக்கப்புக்கு பிறகு மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார் ஹன்சிகா.

  அம்ரிதா அய்யர்

  அம்ரிதா அய்யர்

  பிகில் தென்றல் அம்ரிதா அய்யருக்கு இந்த ஆண்டு கோலிவுட்டில் மிகப்பெரிய வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அம்ரிதா அய்யருக்கு பிகில் படத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

  பிரியா பவானி சங்கர்

  பிரியா பவானி சங்கர்

  மாஃபியா, பொம்மை, இந்தியன் 2 என இந்த ஆண்டு அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நம்ம சென்னை பொண்ணு பிரியா பவானி சங்கர். பல இளைஞர்களின் மொபைல் டிபிக்களில் அலங்கரித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிகள் காத்துக் கிடக்கின்றன.

  கல்யாணி பிரியதர்ஷன்

  கல்யாணி பிரியதர்ஷன்

  ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக க்யூட்டாக நடித்து சென்று கல்யாணி பிரியதர்ஷன், மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். 2020ல் நிச்சயம் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னி பட்டியலில் இவரும் இடம்பிடிப்பார் என்பது கன்ஃபார்ம்.

  English summary
  2020 New year is coming. This year also many more super duper movies will be coming and entertain Tamil Audience. Also the Tamil Actress will ready to stole the heart of the Youths.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X