»   »  தொடை விவகாரம்: பிரியங்கா சோப்ராவுக்கு யார் ஆதரவுன்னு பாரேன்!

தொடை விவகாரம்: பிரியங்கா சோப்ராவுக்கு யார் ஆதரவுன்னு பாரேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரதமர் மோடியை சந்தித்தபோது கால் தெரியும்படி உடைந்த அணிந்ததற்காக விமர்சனத்திற்குள்ளான பிரியங்கா சோப்ராவுக்கு சன்னி லியோன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தனது ஹாலிவுட் படமான பேவாட்சை விளம்பரப்படுத்த நடிகை பிரியங்கா சோப்ரா பெர்லின் சென்றிருந்தார். அப்போது அரசு முறை பயணமாக பெர்லின் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின்போது பிரியங்கா கால் தெரியும்படி உடை அணிந்திருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

ஒரு நாட்டின் பிரதமர் முன்பு இப்படியா அரைகுறையாக உடை அணிந்து கால் மேல் கால் போட்டு உட்கார்வது என்று நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்தனர்.

பிரியங்கா

பிரியங்கா

பிரியங்காவோ தானும், தனது அம்மாவும் தொடை தெரியும்படி உடையணிந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

சன்னி

சன்னி

நாம் மிகவும் ஸ்மார்டான மனிதரை தான் இந்திய பிரதமராக தேர்வு செய்துள்ளோம். மனதில் பட்டதை பேசக்கூடியவர். அவருக்கு பிரியங்காவின் உடையில் பிரச்சனை இருந்திருந்தால் நிச்சயம் கூறியிருப்பார். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை என்கிறார் சன்னி.

உடை

உடை

எனக்கு பிரியங்காவை தெரியும். அவர் மக்களிடம் நல்லவிதமாக பழகுபவர். சமூகத்திற்கு உதவி செய்பவர். அதனால் அவரின் நடவடிக்கைகளை வைத்து அவரை மதிப்பிடலாமே தவிர உடையை வைத்து அல்ல என சன்னி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Sunny Leone has supported Indian actress Priyanka Chopra after she was trolled on social media for wearing a short dress when she met Prime Minister Narendra Modi in Berlin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil