கூலி மோனிகா.. பாடல் ஒருபக்கம் இருக்கட்டும்.. பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடை விலை இத்தனை லட்சமா?

சென்னை: கூலி படத்தில் இடம்பெற்றிருக்கும் மோனிகா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை பலரும் அந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து ரிலீஸ் செய்து ட்ரெண்டிங்கில் வைத்திருக்கிறார்கள். மேலும் பாடலில் பூஜா ஹெக்டே எவ்வளவு வரவேற்பை பெற்றாரோ அதேபோல் சௌபின் சாஹிரும் அப்ளாஸை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான், உபேந்திரா என பலர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது. கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாயை படம் வசூலிக்கும் என இப்போதே பலரும் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆடியோ ரிலீஸ்: படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் இரண்டாம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடக்கிறது. மேலும் அன்றைய தினமே ட்ரெய்லரும் வெளியாகும் என அறிவிப்பு வந்திருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தேதியை தங்களது காலண்டரில் குறித்து வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். ஆடியோ ரிலீஸில் ரஜினியின் பேச்சில் நிச்சயம் ஃபன் எலிமெண்ட்ஸ் நிறையவே இருக்கும் என்பதும் அவர்களது எதிர்பார்ப்பு.

படத்தின் சிங்கிள்கள்: படத்திலிருந்து இதுவரை மூன்று சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டேவும், சௌபின் சாஹிரும் சூப்பர் ஆட்டம் போட்டிருக்கிறார்கள். அந்தப் பாடல் வெளியானபோது பெரிய திருப்தியை கொடுக்காவிட்டாலும் அவர்கள் இரண்டு பேரின் நடனம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இதனால் பாடல் வழக்கம்போல் ஹிட்டடித்துவிட்டது.

dress worn by Pooja Hegde in the song Monica from the movie Coolie cost Rs 5 lakhs
Photo Credit:

ரீல்ஸிலும் அதிகம்: அதுமட்டுமின்றி இந்தப் பாடலுக்கு நடனமாடி சாமானியர்கள், பிரபலங்கள் என பலரும் ரீல்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார்கள். இதன் காரணமாக அந்தப் பாடல் ட்ரெண்டிங்கின் உச்சத்தில் இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க பூஜாவின் நடனம் உள்ளிட்டவைகள் எப்படி பலரது கவனத்தை ஈர்த்ததோ; அதே அளவுக்கு அந்தப் பாடலில் அவர் அணிந்திருந்த உடையும் பெரிய கவனத்தை பெற்றிருக்கிறது.

விலை இத்தனை லட்சமா?: இந்நிலையில் அந்தப் பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி அந்த ஆடை Versace Medusa 95 Grapped Gown வகையை சேர்ந்தது. அதன் விலை கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய் தெரியவந்திருக்கின்றது. மோனிகா பாடலால அந்த உடை ஃபேமஸ் ஆகி; பலரும் வாங்க விருப்பப்பட்டாலும்; விலையை கேட்டு மிரண்டு போயிருக்கிறார்கள்.

பூஜாவின் கிராஃப்: முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே முகமூடி படத்துக்கு கோலிவுட்டிலிந்து ஒதுங்கியே இருந்தார். அதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த அவர்; ரெட்ரோ, ஜன நாயகன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கூலி படத்தில் மோனிகா பாடலில் நடனமாடியதைத் தொடர்ந்து மேற்கொண்டு அவரது கிராஃப் உச்சத்துக்கு சென்றிருப்பதாக திரைத்துறையில் பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X