ஹாலிவுட் நடிகைகளை 'காப்பி'யடித்து டிரஸ் போடும் தீபிகா படுகோனே
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பிற நடிகைகள் போடும் ஆடைகளை காப்பியடித்து அதே மாதிரி உடையை அணிகிறார்.
நடிகை தீபிகா படுகோனே நிகழ்ச்சிகளுக்கு அழகாக ஆடை அணிந்து வருபவர் என்று பெயர் எடுத்துள்ளார். ஆனால் அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணிந்து வரும் ஆடைகளில் பலவற்றை ஏற்கனவே வேறு யாராவது அணிந்து வந்திருப்பார்கள்.
அதாவது வேறு யாராவது நடிகைகள் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து வந்த அதே டிசைன் ஆடையை காப்பியடித்து தீபிகா அணிந்து வந்திருப்பார். இதனால் அவருக்க காப்பிகேட் என்ற பெயர் கிடைத்துள்ளது.

ஜூலி
ஹாலிவுட் நடிகை ஜுலி மேரி பெர்மனை காப்பியடிக்க நினைத்த தீபிகா அதே போன்ற சிவப்பு நிற ஆடையை அணிந்திருக்கிறார். ஆனால் அவர் சிகை அலங்காரம் தான் பொருத்தமாக இல்லை.

கேட் ஹட்சன்
ஹாலிவுட் நடிகே கேட் ஹட்சன் கோல்டன் குளோப் விருது விழாவுக்கு கருப்பு நிற கவுனில் வந்திருந்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த விருது விழாவுக்கு வந்த தீபிகா ஹட்சன் அணிந்து வந்தது போன்ற கவுனில் வந்திருந்தார்.

ஜென்னி
அமெரிக்க நடிகையும், மாடலுமான ஜென்னி மெக்கார்த்தி போட்டிருந்த அதே மாதிரி உடையை தீபிகா படுகோனே நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்தார். தீபிகா உங்களுக்கு என்று ஒரு டிசைனர் இல்லவே இல்லையா?

கயலி மினோக்
ஆஸ்திரேலிய பாடகியும், நடிகையுமான கயலி மினோக் அணிந்திருந்த ஆரஞ்சு கலர் கவுனை காப்பியடித்து போட்டி வந்திருந்தார் தீபிகா படுகோனே. அவர் பல நடிககைளை காப்பியடித்து ஆடை அணிகிறார்.

லேடி விக்டோரியா
மாடலும், பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான
லேடி விக்டோரியா ஹார்வி அணிந்திருந்த கருப்பு நிற ஆடை போன்றே தங்க நிறத்தில் ஆடை அணிந்து வந்தார் தீபிகா.

ஜோ
அமெரிக்க நடிகையான ஜோ சல்டானா அணிந்திருந்த அதே மாதிரியான டிசைனர் ஆடையை வாங்கி அணிந்துள்ளார் தீபிகா. எப்பொழுது பார்த்தாலும் அடுத்தவர்களை காப்பியடிக்காமல் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே.

லோபஸ்
அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸின் ஆடையையும் தீபிகா விட்டுவைக்கவில்லை. லோபஸ் அணிந்திருந்தது போன்ற ஆடையை வாங்கிவிட்டார் தீபிகா.


Click it and Unblock the Notifications











