Anukreethy Vas: அடங்கொக்கமக்கா.. விஜய்சேதுபதி ஹீரோயினா இது? பிகினி உடையில் இந்தக் காட்டு காட்டுறாரே!
சென்னை: விஜய்சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அனுக்ரீத்தி வாஸ் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் படு கிளாமரான போட்டோக்களை தற்போது பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.
2018ல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் அனுக்ரீத்தி வாஸ். திருச்சியை சேர்ந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
மாடலிங் துறையில் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல வைத்தது. மேலும், உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாகவும் இவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் மதர் வளர்ப்பில்: அனுக்ரீத்தி வாஸுக்கு 4 வயது இருக்கும் போதே அவரது அப்பா வீட்டை விட்டு எங்கேயோ ஓடிப் போய்விட்டாராம். இதுவரை அவர் இன்னமும் கிடைக்கவில்லை என அவரே ஒரு பேட்டியில் உருக்கமாக பேசி உள்ளார். அனுக்ரீத்தி வாஸையும் அவரது தம்பியையும் அவரது அம்மா தான் சிங்கிள் மதராக வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்.
அம்மாவின் விருப்பத்திற்கு ஏற்ப சென்னை லயோலா கல்லூரியில் பிஏ ஆர்ட்ஸ் பிரெஞ்சு படிப்பை படித்து முடித்தார். பின்னர், தனது விருப்பத்திற்கு ஏற்ப மாடலிங் துறையில் அசத்த ஆரம்பித்த அனுக்ரீத்தி வாஸ் 2018ல் மிஸ் இந்தியா பட்டத்தையே வென்று அசத்தினார்.

விஜய்சேதுபதி பட ஹீரோயின்: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனை வைத்து 3 படங்கள் இயக்கிய பொன்ராம் சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் படத்தை இயக்கினார். கடைசியாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தை இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டார்.
அந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஹீரோயினாக அனுக்ரீத்தி வாஸ் அன்னபூரணி எனும் கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. அடுத்ததாக வெற்றி எனும் படத்தில் அனுக்ரீத்தி வாஸ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிகினி உடையில் பதற விடுறாரே: மாடல் அழகியான அனுக்ரீத்தி வாஸ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய்லாந்தின் சாமுய் எனும் இடத்தில் உள்ள ஹயாத் ரெசார்ட் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக குளித்து கும்மாளம் போட்ட நிலையில், அதன் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
திருச்சி பொண்ணுக்கு தில்லப் பார்த்தியா: அழகு அள்ளுது அனுக்ரீத்தி வாஸ் என்றும் திருச்சி பொண்ணுக்கு தில்லப் பார்த்தியா என ரசிகர்கள் ஃபயர் விட்டு அனுக்ரீத்தி வாஸின் பிகினி போட்டோக்களை சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











