கொளுத்தும் பாலைவனத்தில் குளு குளு போட்டோ ஷூட் .. பிரபல இளம் நடிகை... ஹேய் சஃபாரி கேர்ள்!

துபாய் : டப்ஸ்மாஷ் வீடியோக்களின் மூலம் பிரபலமான மிருணாளினி ரவி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கிலும் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார்.

தற்பொழுது ஆர்யா விஷால் நடித்து வரும் எனிமியில் கதாநாயகியாக நடித்து வரும் மிருணாளினி துபாய் பாலைவனத்தில் குளுகுளு போட்டோ ஷூட் செய்து அசத்தியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தை கலக்கி வருகிறது.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு

டப்ஸ்மாஷ் என்ற ஒரு வசதி அறிமுகமான காலத்திலேயே திரைப்படத்தின் வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு அழகாக வாய் அசைத்து அதை தொடர்ந்து பதிவிட்டு அப்போதே வைரல் ஆனவர் நடிகை மிருணாளினி ரவி. இப்போது இருக்கும் நடிகைகளை விட இவர் நன்றாக இருக்கின்றாரே ஹீரோயினியாக நடித்தால் என்ன என பலரும் இவரை கேட்டு வர தற்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹீரோயினாக நடித்துள்ளார்

ஹீரோயினாக நடித்துள்ளார்

நடிப்புக்கு தொடக்கப் புள்ளியாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் வந்து சென்ற இவரை பலரும் இன்னும் பல படங்களில் எதிர்பார்க்க அதிரடியாக சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனரான பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதில் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் விரைவில் எம்ஜிஆர் மகன் ரிலீசாக உள்ளது. நடிப்புக்கு தொடக்கப் புள்ளியாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் வந்து சென்ற இவரை பலரும் இன்னும் பல படங்களில் எதிர்பார்க்க அதிரடியாக சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனரான பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதில் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் விரைவில் எம்ஜிஆர் மகன் ரிலீசாக உள்ளது.

 அறிமுகத்தை கொடுத்தார்

அறிமுகத்தை கொடுத்தார்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பது சொல்லித் தெரிய தேவையில்லை. சென்ற ஆண்டு ஜிகர்தண்டா தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதிலும் கதாநாயகியாக நடித்து தெலுங்கிலும் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார். அதர்வாவுக்கும் இந்தப் படம் அறிமுக தெலுங்கு திரைப்படமாக அமைந்தது.

ஹேய் சஃபாரி கேர்ள்

ஹேய் சஃபாரி கேர்ள்

விரைவில் அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க அத்தனை தகுதிகளையும் கொண்டுள்ளது மிருணாளினி இப்பொழுது விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் எனிமி படத்தில் கதாநாயகியாக நடித்து வர அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இப்போது துபாயில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு இடையில் அங்குள்ள பல இடங்களை சுற்றிப் பார்க்கும் வழக்கத்தை கொண்டிருந்த மிருணாளினி ஸ்டைலிஷான கூலிங்கிளாஸ் துபாய் ஸ்டைலில் முண்டாசு என பாலைவனத்தையும் ஒரு கை பார்த்துவிட்டு அதோடு கொளுத்தும் வெயிலிலும் குளுகுளுவென போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி சமூக வலைதளத்தை கலக்கி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஹேய் சஃபாரி கேர்ள் என அழைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: dubai mrinalini ravi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X