Nayanthara - மிக்ஜாம் புயலால் நயன்தாராவுக்கு நேர்ந்த சோகம்.. எதிர்பார்த்தது எல்லாம் வீணாப்போச்சாம்

சென்னை: Nayanthara(நயன்தாரா) மிக்ஜாம் புயல் காரணமாக நயன்தாரா எதிர்பார்த்த ஒன்று நடக்காமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு தொடர்ந்து நடித்துவரும் நயன்தாரா பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Due to Michaung Cyclone something that Nayantara had hoped for did not happen

ஜவான்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்த நயன் முதல் படத்திலேயே தனக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவரது ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்த பாலிவுட் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தரலாம் என்ற யோசனையில் இருக்கிறார்கள். ரன்வீர் சிங் நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் நயன்தாரா கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழிலும் பிஸி: பாலிவுட் பக்கம் சென்றாலும் தமிழிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் தமிழில் இறைவன் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். இது அவருக்கு 75ஆவது படம் ஆகும். இதுதவிர மண்ணாங்கட்டி என்ற படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

சம்பளம் உயர்வு: பாலிவுட்டில் எண்ட்ரி தந்து ஹிட் கொடுத்துவிட்டதால் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. அன்னபூரணி படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் அடுத்த ஹிந்தி படத்துக்கு 10 கோடி ரூபாய் வாங்கலாம் என்ற கணக்கை அவர் போட்டிருந்ததாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. ஆனால் மிக்ஜாம் புயல் அவரது கணக்கை பொய் கணக்காக்கிவிட்டதாம்.

அன்னபூரணி ரிலீஸ்: அதாவது அன்னபூரணி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தாராம் நயன். நல்ல கதைக்களம்; நிச்சயம் வெற்றி பெறும் எனவே தைரியமாக பத்து கோடி ரூபாயை அடுத்தடுத்த படங்களில் கேட்கலாம் என்று எண்ணியிருந்த சூழலில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அன்னபூரணி படத்துக்கு கூட்டம் அவ்வளவாக வரவில்லை.

வசூர் நிலவரம்: படம் ரிலீஸான முதல் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ஒன்னரை கோடி ரூபாய் வசூலித்துவிட்டது படம். ஆனால் வெள்ளத்தின் காரணமாக கூட்டம் குறைந்ததால் வசூலும் சுத்தமாக இல்லை. இதுவரை மொத்தமே இரண்டு கோடி ரூபாய்வரை மட்டும்தான் வசூலித்திருக்கிறதாம் படம். தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தைக்கூட படம் வசூலிக்காததால் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை 10 கோடி ரூபாயாக வாங்க முடியாதோ என்ற சோகத்தில் அவர் இருப்பதால் திரையுலகத்தில் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X