Almost நல்லவன்.. பிக் பாஸ் ராஜு ஜெயமோகனுக்கு ஜோடியான துஷாரா விஜயன்.. ஜி.டி. நாயுடுவிலும் இவங்கதான்!

சென்னை: நடிகை துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அழுகாச்சி கதாபாத்திரங்களை விட்டு விட்டு ஜாலியான ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் துஷாரா விஜயன்.

ஜி.டி. நாயுடு படத்தில் மாதவன் ஜோடியாக நடித்த துஷாரா விஜயன் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மாதவன் உடன் ஜி.டி. நாயுடு கண்டுபிடித்த மோட்டார் சைக்கிளில் ஜம்மென வந்து இறங்கிய காட்சிகள் வைரலாகின.

Dushara Vijay joins hands with Raju Jeyamohan s Almost Nallavan Produced by H Vinoth

அதனை தொடர்ந்து அடுத்த அதிரடியாக தற்போது பிக் பாஸ் ராஜு ஜெயமோகன் ஜோடியாக 'Almost நல்லவன்' எனும் படத்தில் கமிட்டாகியுள்ளார். அந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

எச். வினோத் தயாரிப்பு: விஜய்யின் ஜன நாயகன் படத்தை இயக்கிய பிறகு எச். வினோத் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்கிற கேள்வியும் ஜன நாயகன் படத்துக்கு எப்போப்பா சென்சார் கிடைக்கும்? படம் இந்த மாதமாவது ரிலீஸ் ஆகுமா? என்கிற குழப்பங்களும் எழுந்துள்ள நிலையில், எச். வினோத் அடுத்து தயாரிப்பாளராக மாறி ராஜு ஜெயமோகன் படத்தை பூஜை போட்டு ஆரம்பித்து விட்டார்.

Dushara Vijay joins hands with Raju Jeyamohan s Almost Nallavan Produced by H Vinoth

அல்மோஸ்ட் நல்லவன்: தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஆங்கில தலைப்புகளிலேயே படங்கள் வெளியாவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வரும் நிலையில், ஆங்கிலம் பாதி தமிழ் பாதி டைட்டிலுடன் Almost நல்லவன் என விசித்திரமான ஒரு தலைப்பை வைத்து அந்த படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க உள்ளார் ராஜு ஜெயமோகன். இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

ஜோடியான துஷாரா விஜயன்: ராயன், வேட்டையன், வீர தீர சூரன் என தொடர்ந்து அழுகாச்சி கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த துஷாரா விஜயன் தற்போது மாதவன் நடிப்பில் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு படத்திலும், அதனை தொடர்ந்து செம ஜாலியாக ராஜு ஜெயமோகன் இயக்கவுள்ள இந்த Almost நல்லவன் படத்திலும் இணைந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. விஷாலின் மகுடம் படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல்.

Dushara Vijay joins hands with Raju Jeyamohan s Almost Nallavan Produced by H Vinoth

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X