பாவாடை தாவணியில் புள்ளி மான் போல துள்ளிக்குதிக்கும் துஷாரா விஜயன்!

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கிக்கொண்டு உள்ளவர் நடிகை துஷாரா விஜயன்.

சார்பட்டா பரம்பரை படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இப்பொழுது தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறியுள்ளார்

மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள துஷாரா விஜயன் இப்பொழுது பாவாடை தாவணியில் புள்ளி மானை போல துள்ளி கொதிக்கும் அழகிய புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக களமிறங்கி அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வருபவர் நடிகை துஷாரா விஜயன் . போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து அன்புள்ள கில்லி என்ற படத்தில் நடித்தார். பின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து இப்பொழுது ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆகியுள்ளார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது அந்த வகையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

நேச்சுரலான நடிப்பை

நேச்சுரலான நடிப்பை

ஆர்யா,துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன்,சந்தோஷ் பிரதாப், அனுபமா,ஜான் விஜய் என பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. 1970 மற்றும் 80 களில் வடசென்னையை கலக்கிய சார்பட்டா பரம்பரை,இடியாப்ப பரம்பரை உள்ளிட்ட பல பரம்பரைகளை பற்றி இப்படம் வெளியானது சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா மிரட்டியிருப்பார். ஆர்யாவுக்கு மனைவியாக துஷாரா விஜயன் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பார்.

மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில்

மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில்

சார்பட்டா பரம்பரை துஷாரா விஜயனுக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ள நிலையில் அடுத்தடுத்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் மீண்டும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்து வருகிறார் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கதைகளை இயக்கி வந்த பா ரஞ்சித் அட்டகத்தி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை காதல் படத்தை இயக்குகிறார் காளிதாஸ் ஜெயராம் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பாவாடை தாவணியில்

பாவாடை தாவணியில்

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதை அடுத்து தயாரிப்பு பணிகள் கொண்டுள்ளது. இவ்வாறுதான் அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் துஷாரா விஜயன் திகட்டாத அழகில் பாவாடை தாவணியில் புள்ளி மான் போல துள்ளி குதிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதை அடுத்து அவை வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X