பின்னாடி ஜன்னலே வச்சிட்டாங்களே.. தங்கம் போல தக தகன்னு ஜொலிக்கு துஷாரா விஜயன்.. செம போட்டோஸ்!

சென்னை: 27 வயதாகும் நடிகை துஷாரா விஜயன் வீர தீர சூரன் படத்தில் 59 வயது நடிகர் சீயான் விக்ரமுக்கே சரியான ஜோடியாக நடித்து தூள் கிளப்பியுள்ளார். பெரிதாக அவருக்கு படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் இல்லை என்றாலும், காளியின் மனைவியாக வரும் காட்சிகளில் எல்லாம் கலக்கி உள்ளார். அதிலும், அந்த சிறுவன் கழுத்தில் கத்தி வைத்து தனது கணவரை காப்பாற்றும் இடமெல்லாம் செம சூப்பர்.

போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் 2019ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான துஷாரா விஜயன் 2021ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து முதலிரவு அன்று வந்து கணவன் முன்னாடி குத்தாட்டம் போடும் போதே தான் ஒரு ரேர் பீஸ் என்பதை நிரூபித்துவிட்டார்.

Dushara Vijayan recent instagram snaps steals youngsters hearts

இன்ஸ்டாகிராமில் எப்போதாவது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடும் துஷாரா விஜயன் தற்போது வெளியிட்டுள்ள ஜன்னல் வச்ச சுடிதார் அணிந்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளன.

நடிப்பு ராட்சசி: ஐஸ்வர்யா ராஜேஷுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் டஸ்க்கி ஸ்கின்னுடன் நடிப்பில் தூள் கிளப்பி வருகிறார் துஷாரா விஜயன். அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி, ராயன் மற்றும் வேட்டையன் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு வீர தீர சூரன் 2ம் பாகத்திலும் நடித்து நடிப்பு ராட்சசியாகவே மாறி வருகிறார் துஷாரா விஜயன். சீயான் விக்ரம் டிவிஎஸ் 50ல் ஏறும் காட்சியிலேயே தனது நடிப்பைக் காட்டி அசத்தி விடுகிறார்.

சார்பட்டா பரம்பரை 2: வீர தீர சூரன் படத்துக்குப் பிறகு சார்பட்டா பரம்பரை 2 படத்தில் ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்யாவும் அந்த படத்துக்காகத்தான் தனது உடம்பை மீண்டும் தயார் செய்து வருகிறார். மற்ற ஹீரோயின்களை போல வரிசையாக பல படங்களில் கமிட் ஆகாமல் நல்ல கதைகளையும் நடிக்கும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் துஷாரா விஜயன். வேட்டையன் படத்திலும் ராயன் படத்திலும் கடந்த ஆண்டு இவரது நடிப்பு வெகுவாக பாராட்டுக்களை பெற்றது.

தங்கம் போல ஜொலிக்கிறாரே: சவாலான கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டு அல்வா சாப்பிடுவது போல நடித்து வரும் துஷாரா விஜயன் எப்போதாவது தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்ளையும் குஷிப்படுத்தும் விதமாக கவர்ச்சி போட்டோக்களை அளவான கிளாமருடன் போட்டுத் தாக்கி வருகிறார். தங்க நிறத்தில் ஜொலிப்பது போன்ற சுடிதாரை அணிந்துக் கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

ஜன்னல் வச்சிட்டாங்க: பொதுவாக சேலை அணியும் போது ஜாக்கெட்டில் தான் ஜன்னல் வைத்தெல்லாம் தைப்பார்கள் என்று சொல்வார்கள். சுடிதாரிலேயே முதுகு பக்கத்தில் பெரிய விண்டோவையே வைத்து இந்த சம்மருக்கு நல்லா காத்து வாங்கி வருகிறார் துஷாரா விஜயன் என அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். வயதான நடிகர்களுடன் இணைந்து நடிக்காமல் நட்சத்திரம் நகர்கிறது போன்ற இளமை துள்ளலான சப்ஜெக்ட்களில் நடியுங்கள் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X