GD Naidu: துஷாரா விஜயன் சொன்ன அந்த விஷயம்.. சூப்பரா இருக்கே.. எல்லா நடிகைகளுக்கும் இப்படி அமையுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் துஷாரா விஜயனும் ஒருவர். இப்போது இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'ஜி.டி. நாயுடு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், ஜெயராம், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் ஜூலை 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்த நிகழ்ச்சியில் பேசிய துஷாரா விஜயன் பகிர்ந்த ஒரு அனுபவம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. "நான் 14 வயது வரை கோயம்புத்தூரில்தான் வளர்ந்தேன். ஸ்கூலில் இருந்து வெளியே அழைத்துப் போனால், பெரும்பாலும் ஜி.டி. நாயுடு சார் மியூசியத்துக்குத்தான் கூட்டிட்டு போவாங்க. அங்கிருந்த கார்கள், மெஷின்கள், அவர் கண்டுபிடித்த பொருட்கள் எல்லாத்தையும் ஆச்சரியமாக பார்த்துட்டே இருப்பேன். ஆனால் எதையும் தொடக்கூடாது என்று டீச்சர்கள் சொல்லுவாங்க. அதனால் தூரத்துல இருந்தே ரசிச்சுட்டு வந்திருக்கேன்," என்று நினைவுகளை பகிர்ந்தார்.

Dushara Vijayan s Emotional GT Naidu Museum Memory Wins Hearts Ahead of GT Naidu Movie Release

காலம்: அதன் பிறகு பேசிய அவர், "ஆனா காலம் என்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாருங்க. சின்ன வயசுல மியூசியத்துல பார்த்த அந்த மனிதரின் வாழ்க்கை படத்திலேயே நான் நடிச்சிருக்கேன். இது எனக்கு ரொம்ப பெரிய விஷயம். ஜி.டி. நாயுடு சார் ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டும் இல்ல. அவருக்குள்ள இருந்த மனிதநேயம், உணர்வுகள், வாழ்க்கையை பார்க்கும் பார்வை இதெல்லாமே இந்த படத்தில் வேலை பார்த்த பிறகுதான் எனக்கு இன்னும் நெருக்கமாக புரிஞ்சது. ஒரு நடிகையாக இந்த படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.

எதைப் பார்த்தாலும்: இப்போ எந்த மோட்டாரையோ, எந்த மெஷினையோ பார்த்தாலும், இதுக்கெல்லாம் ஜி.டி. நாயுடு சார் மாதிரி யாரோ ஒருத்தருடைய சிந்தனைதான் அடிப்படைன்னு தோணும். அவர் மாதிரி சிந்திச்ச மனிதர்கள் இருந்ததால்தான் இன்று இவ்வளவு முன்னேற்றம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த படம் எல்லாருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். கண்டிப்பா தியேட்டர்ல போய் பாருங்க," என்றும் துஷாரா விஜயன் அழைப்பு விடுத்தார்.

Dushara Vijayan s Emotional GT Naidu Museum Memory Wins Hearts Ahead of GT Naidu Movie Release

பாராட்டு: இந்த பேட்டி வெளியாகியதிலிருந்து, கோயம்புத்தூரில் ஒரு மாணவியாக ஜி.டி. நாயுடுவின் மியூசியத்தை சுற்றிப் பார்த்த சிறுமி, இன்று அதே ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை படத்தில் நடித்திருப்பது உண்மையிலேயே அழகான பயணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் துஷாராவின் இந்த பேச்சு மேலும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X