மேகத்துக்கு மேல.. உயரத்தில் நிற்கும் அமலா பால்.. நவராத்திரி பற்றி அப்படி ஒரு பதிவு!
சென்னை: நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகி களைகட்டி வருகிறது. இந்நிலையில், நடிகை அமலா பால், நவராத்திரி பண்டிகை குறித்து பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் நடித்த அதோ அந்த பறவை போல திரைப்படம் ஒடிடி தளத்தில் கூட இன்னும் வெளியாகவில்லை.
லாக்டவுனில் கேரளாவில் தனது அம்மாவுடன் வசித்து வந்த அமலா பால், சமீப காலமாக வெளியே சுற்றி போட்டோக்களாக போட்டு வருகின்றனர்.

மேகத்துக்கு மேலே
மலை பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால், மேகத்துக்கு மேலே நிற்கும் போட்டோக்களை போட்டு வைரலாக்கி உள்ளார். ஒரே ஒரு பூப்போட்ட லாங் ஷர்ட் அணிந்து கொண்டு, பூட்ஸ் போட்டு, ரெட் கலர் ஷாலை எடுத்து விரித்து பறவை போல நிற்கும் போட்டோவை பார்க்கும் போதே செம அழகாக இருக்கிறது.

நவராத்திரியும் தாய்மையும்
மேலும், நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ள நிலையில், நவராத்திரியையும் தாய்மையையும் இணைத்து வைத்து அழகான பதிவு ஒன்றை நடிகை அமலா பால் போட்டு பாராட்டுக்களை குவித்து வருகிறார். 9 நாட்கள் துர்கா தேவியை வணங்கும் இந்த நவராத்திரி பண்டிகை தாய்மையின் வடிவம் என அசத்தலாக பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

விழுந்துடப் போறீங்க
உயரத்தில் நிற்கும் அமலா பாலை பார்த்த அவரது ரசிகர்கள், பார்த்து விழுந்துடப் போறீங்க என்று அக்கறையுடன் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். வாவ் எந்த லோகேஷன் அமலா பால் என ஆச்சர்யத்துடனும் கேள்விகளை எழுப்பி உள்ளனர். நவராத்திரி பண்டிகைக்கான வாழ்த்துக்களையும் அமலா பாலுக்கு அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

9 நாட்களுக்கும்
சூப்பரா சொன்னீங்க அமலா பால், அப்படியே 9 நாட்களுக்கும் ஒவ்வொரு போட்டோவாக போடுங்க என நேயர் விருப்பத்தையும் அமலா பால் முன் வைத்துள்ளனர். ஹேப்பி நவராத்திரி அமலா பால் என்றும், நீங்களும் சூப்பர் சக்தி தான் என்றும் அமலா பாலை பாராட்டி கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

காட்டுவாசி லுக்
சமீபத்தில் நடிகை அமலா பால் காட்டுவாசி கெட்டப்பில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை போட்டு வைரலாக்கினார். அதை பார்த்த ரசிகர்கள், என்ன ரொம்ப வயசாகிட்ட மாதிரி இருக்கே என கிண்டல் செய்தும் ட்ரோல் பண்ணி உள்ளனர். அதோ அந்த பறவை போல படத்தை எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











