Don't Miss!
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- News
சரியும் அதானி.. "உண்மை வெளியே வரும்".. நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? போட்டுடைத்த சு. வெங்கடேசன்!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கோடியில் புரளும் சமந்தா.. இன்ஸ்டாகிராமில் கொட்டும் வருமானம்.. ஓவர் கவர்ச்சிக்கு இதுதான் காரணமா?
சென்னை : நடிகை சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிககையாக உள்ளவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் , அறிமுகமானார்.
குறுகிய காலத்தில், விஜய் சூர்யா,விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
உலகளவில் அதிக வசூல் செய்த விக்ரம்.. 2022ல் அதிகமாக வசூலித்த தமிழ்ப்படம் என சாதனை!

நடிகை சமந்தா
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்த இந்த ஜோடி, கடந்த ஆண்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு விட்டு பிரிந்தனர்.

பிரிந்தனர்
இவர்கள் இருவரின் பிரிவுக்கு காரணம் தெரியாமல் இணையத்தில் பலவிதமான வதந்திகள் பரவின. இதனால் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா, நண்பர்களுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.

கதிஜா ரோலில்
இந்த படத்தில் கதிஜா என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நயன்தாராவைவிட , சமந்தா நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் சமந்தா அதிக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக
இன்ஸ்டாகிராமில், ஆக்டிவாக இருக்கும் சமந்தா, ஓவர் கவர்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி பேசுபொருளாகின்றன. எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது சில பொருட்களையும் அதில் விளம்பரப்படுத்தி வருகிறார்.

அதிகசம்பளம்
இந்நிலையில், சமந்தா இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தும் பொருட்களுக்காக, அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், நடிகை சமந்தா மாதத்தில் இரண்டு அல்லது மூன்று விளம்பர வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுகிறார். இதற்காக, அந்த விளம்பர நிறுவனங்கள் அவருக்கு கணிசமான தொகையை சம்பளமாக தருவதாகவும். இதனால் , குறைந்தபட்சம் மாதம் ரூ.3 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பல படங்களில் பிஸி
சமந்தா சகுந்தலம், யசோதா, மற்றும் குஷி என 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸ் , ஆக உள்ளது. மேலும், தி ஃபேமிலிமேன் தொடர் இயக்குனரின் அடுத்த வெப்தொடரிலும் ஹாலிவுட் வெப்தொடரிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.'