நாம் தனித்திருக்கவில்லை.. இந்த பூமித்தாயின் மடியில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.. பிரியங்கா பதிவு!
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் இந்த லாக்டவுனை கழித்து வருகிறார்.
Recommended Video
பூமி தினத்தை முன்னிட்டு, சூரியன் முத்தமிடும் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா, இந்த கொரோனா காலத்தில் நாம் பிரிந்திருந்தாலும், நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் இந்த பதிவுக்கு 1.5 மில்லியன் ரசிகர்கள் லைக் போட்டுள்ளனர்.
அவரது கணவர் நிக் ஜோனஸ் எமோஜிக்களை போட்டு, தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
கடைசியாக தி ஸ்கை இஸ் பிங்க் எனும் பாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பு சார்பாக உருவான ஒன் வேர்ல்ட் எனும் லைவ் இசை கச்சேரியில் தனது பங்களிப்பை கொடுத்திருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, கொரோனா நிதியாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை அதாவது 73.6 லட்சம் ரூபாயை அளிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், யுனிசெஃப், பி.எம். கேர்ஸ், கூன்ஜ், MSF உள்ளிட்ட பல அமைப்புகளுக்கும் கொரோனா நிதியை வழங்க நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனஸ் முன் வந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











