பங்குனி வெயில் போல பளபளக்கும் ஈஸ்வரன் பட நடிகை.. என்ன விலை அழகே!

சென்னை : ஈஸ்வரன்,பூமி என இரண்டு திரைப்படங்களில் நடித்து ஒரே நேரத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.

பவன் கல்யாண் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஹரிஹர வீர மல்லு என்ற சரித்திர திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழிலும் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிதி அகர்வால் இப்பொழுது பங்குனி வெயில் போல பளபளப்பாக மின்னும் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி உள்ளார்.

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

இந்தியில் வெளியான முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடித்து அறிமுகம் செய்யப்பட்ட நடிகை நிதி அகர்வால் அதைத் தொடர்ந்து தெலுங்கில் சவ்யசாசி, மிஸ்டர். மஞ்சு,ஐஸ்மார்ட் ஷங்கர் என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்க தமிழிலும் அதிரடியாக அறிமுகம் செய்யப்பட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு ரீ என்ட்ரி கொடுத்த ஈஸ்வரன் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ஈஸ்வரன் திரைப்படத்திலும் ஜெயம் ரவியின் பூமி திரைப்படத்திலும் நடித்து ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் அறிமுகமானவர்.

ஹரிஹர வீர மல்லு

ஹரிஹர வீர மல்லு

இப்பொழுது மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் நிதி அகர்வால் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள பவன் கல்யாணின் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். சரித்திரப் பின்னணியைக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை கிரிஷ் இயக்கி வர பிரம்மாண்டமாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அனல் பறக்கும் போட்டோ

அனல் பறக்கும் போட்டோ

பார்க்க பப்பாளி பழம் போல பவுசாக பளபளப்புடன் இருக்கும் நிதி கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் குறை வைத்ததில்லை. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விதவிதமான போட்டோ ஷூட் களின் மூலமும் ரசிகர்களை கிளுகிளுக்க வைக்கும் வகையில் அனல் பறக்கும் போட்டோ ஷூட்களை நடத்தி திணறடித்து வரும் இவரது அழகுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

பங்குனி வெயில் போல மின்னும்

பங்குனி வெயில் போல மின்னும்

தற்போதைக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இவர் மிக விரைவிலேயே முன்னணி நடிகை அந்தஸ்தை எட்டிப் பிடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு பங்குனி வெயில் போல பளபளப்பாக மின்னும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் ஆகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X