அட நம்புங்கப்பா.. இவங்கதான் ஈரம் பட நடிகை சிந்து மேனன்.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை: பெங்களுரை பூர்வீகமாக கொண்ட சிந்து மேனன் கன்னடம் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமான இவர் ஒரு சில படத்தில் நடித்து விட்டு, குழந்தை குட்டி என செட்டிலாகிவிட்டார். தற்போது இவர், ஓவர் வெயிட் போட்டு, யாருக்கும் அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கிறார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

நடிகை சிந்து மேனன், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின், தளபதி விஜய்யுடன் சேர்ந்து யூத் படத்தில் நடித்திருந்தார். யூத் படத்திற்கு பிறகு பிறகு தமிழில் படவாய்ப்பு எதிர்பார்த்த படி இல்லாததால் கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க சென்றார்.

Eeram movie actress sindhu menon latest family photo trending on social media

இதையடுத்து, நடிகை சிந்து மேனனுக்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து ஈரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆதி, நந்தா, சரண்யா மோகன் என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரம்யா என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்து பலரின் பாராட்டை பெற்றார் சிந்து மேனன்.

Eeram movie actress sindhu menon latest family photo trending on social media

சிறப்பான நடிப்பு: ஒழுக்கமான பெண்னை சில அற்ப காரணத்திற்காக பழி போட்டு கொன்ற கணவனை கொல்லும் கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருந்தார் சிந்து மேனன். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த படத்தில் சிந்து மேனன் நடிப்பு பேசப்பட்டாலும், அவர் எதிர்பார்த்து போல தமிழில படவாய்ப்பு அமையவில்லை. இதனால், மீண்டும் மலையாள சினிமாவிற்கே சென்றார். அங்கு பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து சிந்துவிற்கு, படவாய்ப்பு குறைந்த அடுத்து, 2010 ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த தொழிதிபரை திருமணம் செய்து கொண்டு லண்டனிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின் இவரது நடிப்பில் ஒரு சில படங்கள் வெளியாகின.

Eeram movie actress sindhu menon latest family photo trending on social media

3 குழந்தைகளின் அம்மா: திருமணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க குடும்பத்தை கவனித்து வரும் சிந்து மேனன் தற்போது 3 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார். மூத்த மகள் சிந்து மேனனைப்போல அதே அழகுடன் இருக்கிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிந்து மேனன், அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அழகான க்யூட்டான அம்மாவாக மாறி சிந்து மேனன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். தற்போது இவரின் குடும்ப போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த போட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள் ஈரம் பட நடிகை சிந்து மேனனா இது என்று கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X