மன அழுத்தம்..136 தூக்க மாத்திரை சாப்பிட்டேன்..நடிகை மோகினியின் உருக்கமான பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் முதலே பிரபலமானவர் நடிகை மோகினி. இவர் ஈரமான ரோஜாவே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமானார். தற்போது கிறிஸ்தவராக மாறியிருக்கும் மோகினி தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
1991ம் ஆண்டு இயக்குநர் கேயார் இயக்கத்தில் உருவான ஈரமான ரோஜாவே படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். காதல் டிராமா திரைப்படமாக உருவான இத்திரைப்படம் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் அறிமுகமான மோகினி தம்முடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து மோகினி, புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

பின்னர் இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது கிறிஸ்தவராக மாறிய இவர் மோகினி கிறிஸ்டினா என்கிற பெயரில் தம்மை மத ஈடுபாட்டுடன் இணைத்துக்கொண்டு ஆன்மீக சொற்பொழிவு, சிந்தனை பகிர்வுகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் இவர் பல முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்போது இயேசு கிறிஸ்துவால் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
நடிகை மோகினி: அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு கட்டத்தில் நாம் எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. இதனையடுத்து நான் கொஞ்சம், கொஞ்சமாக மன அழுத்தத்திற்குள் செல்ல ஆரம்பித்தேன். எனக்கு கெட்ட, கெட்ட கனவுகள் வர ஆரம்பித்தன. பேய் கனவு, பிசாசு கனவுகள் வந்தன. இதனால், என் தூக்கம் பாதிக்கப்பட்டது. அப்போது தான் நான் ஒரு ஜோசியரை சந்தித்தேன். அவர் உங்களுக்கு செய்வினை செய்து வைத்து இருக்கிறார்கள். நீங்களாக தற்கொலை செய்து கொண்டு இறக்க வேண்டும் என்று அதை செய்து இருக்கிறார்கள் கவனமாக இருங்கள் என்றார். அந்த ஜோசியர் சொன்னது போல, எனக்கும் தற்கொலை எண்ணம் அதிகமாக வந்தது.
செய்வினை செய்தார்கள்: மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த நான், கல்யாணம் வேண்டாம் என்று முடிவு செய்து, என்னுடைய கணவரிடம், எனக்கு கல்யாணத்திற்கு பிறகுதான் இப்படி ஆக ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லி, கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவர் படித்தவர் என்பதால், என்னை சமாதானப்படுத்தினார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே என்று சொன்னார். அதன் பிறகு தான், நான் ஒரு சிவாச்சாரியாரை சென்று சந்தித்தேன். அவரிடம் செய்வினையெல்லாம் உண்மையா என்று கேட்டேன். அதற்கு அவர் நல்லது இருக்கு என்றால், கெட்டது என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும் என்று சொன்னார்.
இயேசு கிறிஸ்து கனவில் வந்தார்: அப்போது நான் ஜோசியம், ஜாதகம், நேரம், கர்மா இவை அனைத்தையும் கடந்த கடவுள் யார் என்று தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் என்னுடைய கனவில் இயேசு கிறிஸ்து வந்தார். இயேசு கிறிஸ்து எப்போது என்னுடைய கனவில் வந்தாரோ, அன்றிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்க ஆரம்பித்து விட்டது. கெட்ட கனவுகள் இல்லை, என்னுடைய உடல்நலம் தேற ஆரம்பித்தது. தற்கொலை எண்ணம் வரவில்லை, மனதில் நிம்மதி அடைய ஆரம்பித்தது.
136 தூக்கமாத்திரை: ஒரு முறை நான் கையை அறுத்துக்கொண்டேன், அதேபோல இன்னொரு முறை எலி மருந்தை கோக்கில் கலந்து குடித்தேன். நானும் உடலுக்கு ஏதாவது ஆகும் என்று காத்திருந்தேன். ஆனால் எனக்கு எதுவும் ஆகவில்லை. இன்னொரு முறை கிட்டத்தட்ட 136 தூக்க மாத்திரைகளை அப்படியே சாப்பிட்டேன். ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு எழுந்து, 136 தூக்க மாத்திரைகளை நான் அப்படியே சாப்பிட்டேன். ஆனாலும் எனக்கு ஒன்னும் ஆகல, இயேசு கிறிஸ்து என்னுடைய வாழ்க்கையில் பல முறை என்னை காப்பாற்றி இருக்கிறார் என்று நடிகை மோகினி மனம் திறந்து பல விஷயத்தை பேசினார்.


Click it and Unblock the Notifications











