கொஞ்சம் கூட பயமே இல்லை.. பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை.. த்ரில் வீடியோ!
ஹைதராபாத்: நடிகை ஈஷா ரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை ஈஷா ரெப்பா.
டோலிவுட் படமான அந்தக முண்டு ஆ தர்வதா எனும் படத்தின் மூலம் 2013ம் ஆண்டு ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார் ஈஷா ரெப்பா.

ஜிவி பிரகாஷ் ஜோடி
ஓய் எனும் தமிழ் படத்தில் 2016ம் ஆண்டு நடித்து கோலிவுட்டில் அறிமுகமான ஈஷா ரெப்பா ஜிவி பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளியாகாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் காத்திருக்கும் படத்தில் இந்த படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் என்டிஆர் படத்தில்
டோலிவுட்டின் இளம் நடிகையான ஈஷா ரெப்பா 2018ம் ஆண்டு வெளியான ஜூனியர் என்டிஆரின் அரவிந்த சமேத வீரராகவா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் பூஜா ஹெக்டே லீடு ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இளம் தெலுங்கு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் ஈஷா ரெப்பா டாப் நடிகர்கள் படத்திலும் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்.

பிட்ட கதலு
அமலா பால், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகள் நடிப்பில் லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கு வெர்ஷனான பிட்ட கதலு ஆந்தாலஜியில் பிங்கியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. 3 ரோசஸ் எனும் வெப் தொடரிலும் நடித்துள்ள இவர் கடைசியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் படத்திலும் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட்டான போட்டோக்களை போட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ஈஷா ரெப்பா.

துபாய் டூர்
துபாய் எக்ஸ்போ நடைபெற்று வருவதால் மிக குறைவான விலையில் பலரும் அங்கே சென்று இந்த கோடையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஈஷா ரெப்பாவும் தற்போது தனது சம்மர் ஹாலிடேவை துபாயில் செம த்ரில்லிங்கான அனுபவத்துடன் கொண்டாடி வருகிறார்.

விமானத்தில் இருந்து குதித்து
விமானத்தில் இருந்து எட்டிப் பார்த்தாலே பலருக்கும் தலையே சுற்றி விடும். ஆனால், பறக்கும் விமானத்தில் இருந்து அப்படியே குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்ய நிஜமாகவே அதிகமான துணிச்சல் வேண்டும். துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஈஷா ரெப்பா தற்போது அந்த சாகசத்தை நிகழ்த்திய காட்டிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார்.
I DID THAT!!! pic.twitter.com/mJ2Jc5tcjN
— Eesha Rebba (YoursEesha) March 28, 2022
செம கெத்து
உங்களுக்கு பயமே கிடையாதா ஈஷா ரெப்பா? இப்படி பல அடி உயரத்தில் இருந்து குதித்து கெத்து காட்டுறீங்களே என ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து வாய் பிளந்தபடி லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து அந்த வீடியோவை டிரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக ராய் லக்ஷ்மி உள்ளிட்ட சில நடிகைகள் இது போன்று ஸ்கை டைவிங் சாகசத்தை செய்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











