அவ வந்தா நான் வர மாட்டேன்: மெஹ்ரீனுக்கும், காஜலுக்கும் இடையே லடாயா?

By Siva

ஹைதராபாத்: காஜல் அகர்வாலுக்கும், மெஹ்ரீன் பிர்சாதாவுக்கும் இடையே பிரச்சனை என்று டோலிவுட்டில் பேச்சு கிளம்பியது.

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தெலுங்கு படம் கவச்சம். அந்த படத்தில் காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாதா என்று இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

ஒரு படத்தில் 2 ஹீரோயின்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை என்று பேச்சு கிளம்பும். அதற்கு இந்த படம் மட்டும் விதிவிலக்கா என்ன?

காஜல்

காஜல்

கவச்சம் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு மெஹ்ரீன் வந்தால் நான் வர மாட்டேன் என்று காஜல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் தான் கவச்சம் இசை வெளியீட்டு விழாவுக்கு மெஹ்ரீன் வரவில்லை என்று கூறப்பட்டது. படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாம்.

 சின்ன நடிகை

சின்ன நடிகை

நான் பெரிய நடிகை என்று காஜலுக்கு ஈகோவாம். பாடல்களை படமாக்க படக்குழு அண்மையில் துபாய்க்கு சென்றது. மெஹ்ரீனின் பகுதியை படமாக்கும் வரை நான் துபாய்க்கு வர மாட்டேன் என்று காஜல் அடம்பிடித்துள்ளார். மெஹ்ரீன் இந்தியா திரும்பிய பிறகே காஜல் துபாய்க்கு சென்றிருக்கிறார்.

 ஹீரோயின்

ஹீரோயின்

நான் பெரிய நடிகை என்னை சின்ன நடிகையான மெஹ்ரீனுடன் சரிசமமாக நடத்தக் கூடாது என்று தான் அம்மணிக்கு இந்த கேம் ஆடினாராம். ஆனால் ஈகோவும் இல்லை போகோவும் இல்லை என்று காஜலும், மெஹ்ரீனும் தெரிவித்துள்ளனர். ஆனால் நெருப்பில்லாமல் புகையாதே என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 விளக்கம்

விளக்கம்

தனக்கு ஷூட்டிங் இருந்ததால் கவச்சம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று மெஹ்ரீன் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் காஜலுடனான பிரச்சனையால் தான் அவர் வரவில்லை என்று பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X