பாலிவுட்டில் படுதோல்வியை சந்தித்த சாய் பல்லவி.. அமீர்கான் அழுது சீன் போட்டாலும் மகன் படம் ஓடலையே!
மும்பை: சாய் பல்லவி இந்தியில் ராமாயாணம் படத்தின் மூலமே அறிமுகம் ஆகியிருந்தாலும் அவருக்கு நல்ல ஓபனிங் கிடைத்திருக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ராமாயணம் வெளியாவதற்கு முன்பே அவசர கதியில் உருவான அமீர்கான் மகன் ஜுனைத் கான் நடித்த 'ஏக் தின்' (ஒரு நாள்) திரைப்படம் மே 1ம் தேதி வெளியான நிலையில், விடுமுறை நாளிலும் படம் படுத்து விட்டது பாலிவுட்டை அதிர்ச்சியாக்கி உள்ளது.
தென்னிந்திய நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகள் பாலிவுட்டில் நடித்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா எல்லாம் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்து மாஸ் காட்டியுள்ளனர்.

நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அவரது படம் முதல் நாளில் அதிகபட்சமாக 1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமீர்கான் மகன் படம்: அமீர்கான் தனது மகன் ஜுனைத் கானை முதலில் ஏக் தின் படத்தின் மூலம் தான் அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன் என சமீபத்தில் நடந்த ப்ரீமியரில் படத்தை பார்த்து கண் கலங்கி அழுது பேசியது வைரலானது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியான மகாராஜ் திரைப்படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் ஜுனைத் கான். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால், ஏக் தின் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை முதல் நாளிலேயே கொடுத்துள்ளது.
ஏக் தின் முதல் நாள் வசூல்: சுனில் பாண்டே இயக்கத்தில் ஜுனைத் கான், சாய் பல்லவி நடித்த ஏக் தின் திரைப்படம் முதல் நாளில் 1,710 ஷோக்கள் திரையிடப்பட்ட நிலையிலும், வெறும் 1 கோடி ரூபாய் வசூலை மட்டுமே ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வெறும் 14 சதவீதம் இருக்கைகள் மட்டுமே நிரம்பியது என்றும் பாலிவுட் ரசிகர்களுக்கு இந்த காதல் கதை பிடிக்கவில்லை என்றும் டிரைலரை பார்த்தே கடுப்பானது தான் காரணம் என்கின்றனர். அமீர்கான் படங்கள் தான் தொடர்ந்து சொதப்பி வருகிறது என்று பார்த்தால் தற்போது அவர் மகன் நடித்த படமும் ஃப்ளாப் ஆகிவிட்டதே என ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஜெனிலியா கணவர் அதிக வசூல்: மே 1ம் தேதி பாலிவுட்டில் ஜெனிலியா கணவர் ரித்தேஷ் தேஷ்முக் நடித்த ராஜா சிவாஜி திரைப்படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அந்த படம் முதல் நாளில் அதிகபட்சமாக 11 கோடி வசூலை ஈட்டியது. அந்த படத்துடன் மோதியது தான் ஏக் தின் படத்தின் வசூல் இந்த அளவுக்கு குறைய காரணம் என்கின்றனர்.
பாலிவுட்டில் பல்பு வாங்கிய சாய் பல்லவி: ராமாயணம் படத்தின் டீசர் வெளியானதும் கடும் ட்ரோல்களை சந்தித்தன. அந்த படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகியிருந்தால் கூட முதல் நாள் வசூல் பெரிதாக இருந்திருக்கும். அமீர்கான் மகன் படத்தில் சாய் பல்லவி அறிமுகமாகி உள்ள நிலையில், பாலிவுட்டில் பல்பு வாங்கி விட்டாரே என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள சாய் பல்லவியின் 2000 கோடி படம் பாக்ஸ் ஆபீஸில் என்ன மேஜிக் செய்யப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.;


Click it and Unblock the Notifications