அமிதாப், கரீனாவை தொடர்ந்து போரோப்ளஸ் பிராண்ட் அம்பாசிடரான பிபாஷா
கொல்கத்தா: இமாமி நிறுவனம் தனது போரோப்ளஸ் பிராண்ட் அம்பாசிடராக நடிகை பிபாஷா பாசுவை நியமித்துள்ளது.
இமாமி நிறுவனத்தின் போரோப்ளஸ் பிராண்ட் அம்பாசிடர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை கரீனா கபூர் கான் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் போரோப்ளஸ் பிராண்ட் அம்பாசிடராக இந்தி நடிகை பிபாஷா பாசு நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாமி போரோப்ளஸ் ரூ. 400 கோடி மதிப்புடையது. அது போரோப்ளஸ் ஆன்டிசெப்டிக் க்ரீம், போரோப்ளஸ் மாய்ச்சுரைசிங் லோஷன் மற்றும் போரோப்ளஸ் ப்ரிக்லி ஹீட் பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

அதிகம் விற்பனையாகும் க்ரீம்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆன்டிசெப்டிக் க்ரீம் போரோப்ளஸ் க்ரீம் தான். இந்தியா தவிர உக்ரைன், ரஷ்யா மற்றும் நேபாளத்திலும் போரோப்ளஸ் ஆன்டிசெப்டிக் க்ரீம் அதிக அளவில் விற்பனையாகிறது.

அமிதாப், கரீனா
அமிதாபும், கரீனாவும் போரோப்ளஸ் ஆன்டிசெப்டிக் கிரீம் விளம்பரத்தில் வருகின்றனர். மேலும் கரீனா போரோப்ளஸ் அட்வான்ஸ்ட் மாய்ச்சுரைசிங் லோஷன் விளம்பரத்திலும் வருகிறார்.

வாஸ்கோகேர்
பிபாஷா பாசு இமாமியின் வாஸ்கோகேர் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். இந்நிலையில் தான் அவர் போரோப்ளஸ் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். பிபாஷா போரோப்ளஸ் பேஸ் வாஷ் விளம்பரத்தில் வரவிருக்கிறார்.

இமேஜ் கூடும்
ஏற்கனே அமிதாப், கரீனா உள்ள நிலையில் பிபாஷாவும் போரோப்ளஸ் பிராண்ட் அம்பாசிடராக ஆகியிருப்பது பிராண்டின் இமேஜை கூட்டும் என்று இமாமி நிறுவன இயக்குனர் ப்ரிதி ஏ. சுரேகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











