3 வருட லவ்.. காதல் காட்சிகளில் நடிப்பதை அவர் வெறுக்கிறார்.. வெளிப்படையாகச் சொல்லும் ஹீரோயின்!

By

சென்னை: காதல் காட்சிகளில் வேறொருவருடன் நடிப்பதை தனது காதலர் விரும்பவில்லை என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில் சசி இயக்கத்தில் பரத் நடித்த ஐந்து ஐந்து ஐந்து, விரட்டு, மீரா கதிரவன் இயக்கிய விழித்திரு படங்களில் நடித்தவர், எரிக்கா பெர்னாண்டஸ்.

இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இந்தி டிவி தொடர்களில் நடித்துள்ளார். ஏக்தா கபூர் தயாரிக்கும் கசவுத்தி ஜிந்தகி கே என்ற தொடர் மூலம் இன்னும் பிரபலம் அடைந்தவர் இவர்.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

இப்போது இந்த தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, சமூக வலைத்தளங்களில் லைவாக நடிகர், நடிகைகள் பேட்டி அளித்து வருகின்றனர். நடிகை எரிக்கா பெர்னாண்டஸும் சமீபத்தில் பேட்டி அளித்தார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவருடைய காதல் பற்றி கேட்கப்பட்டபோது, ஒப்புக்கொண்டார்.

காதலித்து வருகிறேன்

காதலித்து வருகிறேன்

தான் காதலில் இருப்பதாகத் தெரிவித்தார். 'சிங்கிள் இல்லை, காதலித்து வருகிறேன். எனது காதலர் சினிமாத்துறையை சேர்ந்தவர் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, அவர் எனது சிறந்த நண்பர். நாங்கள் மூன்று வருடமாகக் காதலித்து வருகிறோம். நாங்கள் எல்லா முட்டாள்தனமான விஷயங்கள் பற்றியும் பேசுவோம்.

தவிர்க்க முடியாது

தவிர்க்க முடியாது

நான் சினிமாவில் ஹீரோக்களை ரொமான்ஸ் செய்தால், அவரால் தாங்க முடியாது. அதை அவர் விரும்பமாட்டார். படப்பிடிப்புக்கு வந்தால், அந்தக் காட்சிகளின் போது எழுந்து வெளியே சென்றுவிடுவார் என்று கூறியுள்ளார். நடிகை எரிக்கா, இதற்கு முன் அவருடன் நடித்த ஜாகீர் ஷேக் உட்பட சிலருடன் கிசுகிசுக்கப் பட்டிருந்தார். அதுபற்றி கேட்டபோது, அது வதந்தி, அதைத் தவிர்க்க முடியாது' என்றார்.

வெளிப்படையாக

வெளிப்படையாக

அதோடு, இந்த வதந்திகளால்தான் நான் என் காதலை வெளிப்படையாகச் சொல்ல வேண்டி இருக்கிறது என்றும் அவர் கூறினார். 'எனக்கும் என் காதலருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இது சில நேரங்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சரிபடுத்த உதவுகிறது. ஒரு கோபமாக இருந்தால் ஒருவர் அமைதியாகி விட வேண்டும், கூலான பிறகு விவாதித்துக் கொள்ளலாம். இந்தத் தன்மை எங்களிடம் இருக்கிறது' என்று கூறியுள்ளார் எரிக்கா.

More from Filmibeat

Read more about: actress நடிகை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X