நம்ம எருமசாணி ஹரிஜாவா இது? மாடல் அழகிகளுக்கே டஃப் கொடுப்பார் போலயே.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: எருமசாணி எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரிஜா, லேட்டஸ்ட்டாக எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

யூடியூப் பல இளைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சிறந்த தளமாக அமைந்து வருகிறது.

பலர் இதை சரியாக பயன்படுத்தி சம்பாதித்தும் வருகின்றனர். அதில் சிலர், பிரபலமாகி சினிமா பட வாய்ப்புகளையும் தட்டிச் செல்கின்றனர்.

எருமசாணி ஹரிஜா

எருமசாணி ஹரிஜா

எருமசாணி எனும் யூடியூப் சேனல் மூலம் விஜய்குமார் மற்றும் ஹரிஜா இணைந்து நகைச்சுவையான டிரெண்டிங் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் வீடியோ வெளியானாலே போதும் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் அதை பார்த்து வைரலாக்குவது வழக்கம். அந்த யூடியூப் சேனலில் கிடைத்த புகழை தொடர்ந்து சினிமா பக்கமும் ஹரிஜா காலடி எடுத்து வைத்தார்.

சிவகார்த்திகேயன் தங்கச்சி

சிவகார்த்திகேயன் தங்கச்சி

அதர்வா ஹன்சிகா நடிப்பில் வெளியான '100' மற்றும் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ஹரிஜாவுக்கு கிடைத்தன. ராஜேஷ் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் ஹரிஜாவுக்கு படத்தில் மிகப்பெரிய ரோலும் கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோஷூட்

போட்டோஷூட்

ஹரிஜாவுக்கு நிச்சயதார்த்தம் ஆகிடுச்சு, விரைவில் கல்யானம் பண்ணி செட்டில் ஆகப் போகிறார் என்ற தகவல் வந்த நிலையில், தற்போது மாடல்களையே மிரள விடும் அளவுக்கு பக்காவாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தெறிக்க விட்டு வருகிறார் நம்ம எருமசாணி ஹரிஜா.

ஸ்லீவ்லெஸ் உடையில்

ஸ்லீவ்லெஸ் உடையில்

சின்ன பொண்ணாக க்யூட்டாக காமெடி வீடியோக்களில் நடித்து கலக்கி வந்த ஹரிஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில், அவர் எடுத்ட ஸ்லீவ்லெஸ் டிரெஸ் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அட நம்ம எருமசாணி ஹரிஜாவா இவர் என்று வியக்கவே வைத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X