நான் மோசடி செய்தேனா? ஆதாரம் என்னிடம் இருக்கு.. நீதிமன்றத்தில் சந்திக்கலாம்? எருமைசாணி விஜய் ஆதங்கம்!
சென்னை: மலையாள நடிகையான அனுகிரஹா "ரிசார்ட்" என்கிற தமிழ் வெப் தொடரில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து வீடியோ வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தயாரிப்பு குழு மீதும் நடிகர் விஜய குமார் மற்றும் அவரது மனைவி மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார். இது இணையத்தில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் விஜய் குமார் இன்ஸ்டாகிராமில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை அனுப்ரஹாவின் தனது இன்ஸ்டாகிராமில் கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், "ரிசார்ட்" வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தப்படாமல் தன்னை நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்தால், மற்ற திரைப்பட வாய்ப்புகளை இழந்ததுடன், பொருளாதார ரீதியாகவும் மனதளவிலும் பாதிக்கப்பட்டதாக புகார் கூறினார். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, விஜய் குமாரை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் பதில் அளிக்கவில்லை என்றும், பின்னர் நண்பரின் மொபைலில் இருந்து அவருக்கு போன் செய்த போது அவரது மனைவி நக்ஷத்ரா அசிங்கமாக பேசினார் என கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

நக்ஷத்ரா: இதற்கு விளக்கம் அளித்த விஜய்குமாரின் மனைவி நக்ஷத்ரா, இரவு 11.30 மணிக்கு அனுகிரஹாவின் ஆண் நண்பர் பணம் கேட்டு போன் செய்தார். தயாரிப்பு தொடர்பான விஷயங்களை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்க வேண்டும் என்றும் கூறினேன் தொடர்ந்து அவர் போனை வைக்காமல் கத்திக்கொண்டே இருந்ததால், கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு ஃபோனை வைத்தேன் என்றார். அதற்கு பதிலளித்த அனுகிரஹா, நீங்கள் தயாரிப்பாளரல்ல, இயக்குநரல்ல; விஜயகுமாருக்குப் பதிலாக நீ ஏன் பேசுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
விளக்க வீடியோ: இதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜய்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த பிரச்சினையை முதலில் சட்ட ரீதியாக சமாளிக்க நினைத்ததாகவும், தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் விளக்கம் கேட்பதால் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். "ரிசார்ட்" தொடரின் கதை முக்கோண காதல் கதை என்று முன்பே தெளிவாக கூறி தான் அனுகிரஹா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அனுகிரஹா வேறு ஆடிஷனுக்கு சென்றார். அதற்கும் தயாரிப்பு நிறுவனம் அனுமதி அளித்தது. அந்த நாளில் தயாரிப்பு குழுவிற்கு நஷ்டம் ஏற்பட்ட போதும், அந்த நாளுக்கான சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் அனுகிரஹா நடித்ததற்கான மொத்த பணத்தையும் வாங்கிவிட்டார்.
சட்டரீதியாக எதிர்கொள்வேன்: நடித்ததற்கான பணத்தை அனுகிரஹா ஏற்கனவே பணம் பெற்றிருந்தபோதும் மீண்டும் பணம் கேட்பது நியாயமில்லை. என்னையும் தனது குடும்பத்தினரையும் குறிவைத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பதிவாகி வருவதாகவும், தாம் எந்த விதமான பண மோசடியும் செய்யவில்லை. சின்னதாக யூடியுப் சேனல் தொடங்கி அதன்பிறகு படிப்படியாக இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன் நான் எப்படி மோசடி செய்வேன். ஒரு பெண் அழுது வீடியோ போட்டுவிட்டால் உடனே அவருக்கு ஆதரவாக பேசி என்னையும் என் குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்வது நியமில்லை. தேவையான அனைத்து ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக நான் எதிர்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications