ஆக்ஷன் மட்டுமில்ல.. இஷா குப்தாவின் வெப் சீரிஸில் அந்த விஷயமும் எக்கச்சக்கம்.. வைரலாகும் டீசர்!
மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா நடிப்பில் உருவாகி உள்ள 'REJCTX 2' வெப் சீரிஸ் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
இன்ஸ்டாகிராமில் வித விதமான யோகாக்களை செய்து அதன் புகைப்படங்களை ஷேர் செய்து இந்த லாக் டவுன் நேரத்திலும் தனது ரசிகர்களை செம ஆக்டிவாக வைத்துள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'REJCTX 2' வெப் சீரிஸ் டீசரை வெளியிட்டுள்ளார்.

அறிமுகம்
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் வெளியான ஜானத் 2 படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் இஷா குப்தா. ராஸ் 3டி படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இஷா குப்தா. தொடர்ந்து, ஹம்ஷகல்ஸ், ரஸ்டம், கமாண்டோ 2 என பல படங்களில் நடித்துள்ளார்.
ரப்பர் போல
இஷா குப்தா தனது உடம்பை ரப்பர் போல வளைத்து, நெளித்து செய்யும் யோகா புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றது. எப்படி இப்படி செய்யிறாரு, அவர் உடம்பில் எலும்பே இல்லையா என பாலிவுட் பிரபலங்களே பலர் வியந்து கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramA post shared by Esha Gupta🌎 (@egupta) on
ஜி5 வெப்சீரிஸ்
இயக்குநர் கோல்டி பெல் இயக்கத்தில் உருவாகி உள்ள ரிஜெக்ட்ஸ் 2 வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிகை இஷா குப்தா நடித்துள்ளார். ரெனி எனும் போலீஸ் அதிகாரியாக இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள டீசரில் இஷா குப்தாவின் மிரட்டலான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

லெஸ்பியன் காட்சிகள்
பாலிவுட்டின் கிளாமர் குயினான இஷா குப்தாவின் ஆக்ஷன் சரவெடி காட்சிகள் நிறைந்த REJCTX சீசன் 2 வெப் சீரிஸில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக ஹாட்டான லெஸ்பியன் லிப் லாக் காட்சிகளும் டீசரிலேயே நிறைந்து காணப்பட்டு ரசிகர்களின் ரத்த அழுத்தத்தை அதிகரித்து உள்ளது.

சும்மாவே கலக்குவாங்க
இஷா குப்தா கிளமரில் சும்மாவே கலக்குவாங்க, இப்படியொரு வெப்சீரிஸ் வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா விடுவார். வெப்சீரிஸ்களில் அதிகளவில் சென்சார் இல்லாததும் அதுபோன்ற காட்சிகளை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்து வைப்பது போல அமைந்திருக்கிறது. விரைவில் இரண்டாம் சீசன் ஜீ 5 ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒளிபரப்பாக காத்திருக்கிறது.

செம வியாபாரம்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சினிமா தொழில் முடங்கிப் போய் இருக்கிறது. இந்த லாக் டவுன் நேரத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் தான் கல்லா கட்டி வருகின்றன. ஏற்கனவே ஷூட் செய்யப்பட்ட தொடர்களை எடிட் செய்து ஒளிபரப்ப பல நிறுவனங்களும் உழைத்து வருகின்றன. இனி வரும் காலங்களில் பெரிய படங்களும், ஆன்லைன் பிளாட்ஃபார்ம் வழியாகவே வெளியாகும் காலமும் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications











