நாய்களை அடிக்கும் ஆண்களின் 'அதை' அறுக்க வேண்டும்: நடிகை ஆவேசம்
மும்பை: நாய்களை அடித்து துன்புறுத்தும் ஆண்களின் மர்மஉறுப்பை அறுக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை இஷா குப்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை இஷா குப்தா ஒரு விலங்குகள் பிரியர். பீட்டா ஆதரவாளர். அவருக்கு யாராவது விலங்குகளை அடித்து துன்புறுத்தினால் கோபம் வந்துவிடும். அந்த அளவுக்கு விலங்குகள் மீது பாசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

வீடியோ
ஒருவர் நாயை அடித்துக் கொடுமைப்படுத்தும் வீடியோவை எனக்கு மேக்கப் போடுபவர் என்னிடம் காண்பித்தார். நான் சமூக வலைதளங்களில் இல்லாததால் இது போன்ற வீடியோக்கள் என் கவனத்திற்கு வருவது இல்லை.

நாய்கள்
எங்கள் வீ்ட்டில் 4 நாய்கள் உள்ளன. அதில் 2 தெருவில் இருந்து எடுத்து வரப்பட்ட நாய்கள். எங்கள் வீட்டு நாய்களில் ஒன்று அண்மையில் இறந்துவிட்டது. அந்த மரணம் என்னை காயப்படுத்தியது.

விலங்குகள்
வாய் பேச முடியாத விலங்களுக்கு ஆதரவு அளிப்பவள் நான். அந்த நாயை அடித்து துன்புறுத்தியதால் அதன் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அடிக்கு அடி தான் சரி. நாய்களை அடிக்கும் அந்த நபரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும்.

பெண்கள்
பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள் படும்பாடை பார்க்கையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது போதாது. அரபு நாடுகளை போன்று அவர்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றார் இஷா.


Click it and Unblock the Notifications











