ஒரு பக்கம் டிரெஸ் கழண்டு விழுது.. ஆனா.. இஷா குப்தாவின் கவலையெல்லாம் எதை பத்தி தெரியுமா?
மும்பை: பாலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் நடிகை இஷா குப்தா பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கேலியையும் கிண்டலையும் உருவாக்கி இருக்கிறது.
Recommended Video
மீரா மிதுன், யாஷிகா ஆனந்த் தினமும் கோலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்த ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருவது போல, பாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறார் நடிகை இஷா குப்தா.
யோகக் கலையில் சிறந்து விளங்கும் இவர், பதிவிடும் வித்தியாசமான ஆசனங்களை முயற்சி செய்ய முடியாமல் பலரும் திகைத்து வருகின்றனர்.

தமிழில்
இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இஷா குப்தா, தமிழிலும் ஒரு படத்தில் தலை காட்டியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான யார் இவன் படத்தில் லீடு ரோலில் நடித்த சச்சின் ஜோஷிக்கு ஜோடியாக இஷா நடித்துள்ளார். நடிகர் பிரபு அந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சரணுடன்
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ராம்சரண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் விநய விதேய ராமா. அந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார். பாலிவுட் நடிகை இஷா குப்தா ஏக் பார் எனும் ஐட்டம் நம்பரில் ஆடியும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தும் அசத்தினார்.

ஹாட் போட்டோஸ்
இந்த லாக் டவுன் ஆரம்பித்ததில் இருந்து பாலிவுட் நடிகையான இஷா குப்தா தனது உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை தினமும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். பிகினியில் இருக்கும் புகைப்படங்களையும், பேன்ட் ஜிப் போடாத செல்ஃபிக்களையும் பதிவிட்டு இணையத்தை கிறங்கடித்து வருகிறார்.

சரியும் ஆடை
இந்நிலையில், இஷா குப்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோ ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்திருக்கிறது. உள்ளாடை ஏதும் அணியாமல் ஒரு பக்கம் ஆடையை கழட்டி விட்டு, செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் லட்சக் கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.

சரக்கடிக்க வெயிட்டிங்
ஒரு பக்கம் ஆடை கழண்டு விழும் அளவுக்கு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டது மட்டுமின்றி, அதற்கு கேப்ஷனாக, இரவு தனியாக மது குடிக்க காத்திருக்கிறேன் என இஷா போட்ட கேப்ஷன் தான் இந்த அதிரிபுதிரியான வைரலகுக்கு காரணமே. இந்த லாக் டவுன் நேரத்தில் பாலிவுட் நடிகைகளுக்கு மட்டும் எப்படி சரக்கு கிடைக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அவர்தான் இருக்காரே
ஏன் தனியா சரக்கடிக்கணும், துணைக்குத் தான் உங்களை தினமும் வளைத்து வளைத்து போட்டோ எடுக்கும் போட்டோகிராஃபர் இருக்காரே எனவும் சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்து இஷா குப்தா தனிமையில் இந்த லாக்டவுனில் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர். மற்றும் சிலர் என்ன பிராண்ட் என சொல்லுங்கள் என்றும், சிலர் சியர்ஸ் என்றும், எங்களுக்கும் கொஞ்சம் தண்ணி காட்டுங்களேன் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











