அவங்க உடல் மினுமினுப்பா இருக்கறதுக்கு இதுதான் காரணமாமே.. ரசிகைக்கு ரகசியம் சொன்ன பிகினி ஹீரோயின்!

By

மும்பை: பிகினி படத்தை வெளியிட்டுள்ள பிரபல நடிகையை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

கணவர் எப்போதும் போனில் பிசி.. கடுப்பில் அந்த மொழியை கற்றுக்கொண்ட நடிகை - வீடியோ

பிரபல இந்தி நடிகை இஷா குப்தா. ஜன்னத் 2, அக்‌ஷய் குமாரின் ரஸ்டம், ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, காமாண்டோ 2, ராஸ் 3 உட்பட பல பாலிவுட் படங்களில் கலக்கியுள்ளார்.

மாடலிங்கிலும் ஆர்வம் உள்ள இஷா குப்தா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார்.

சிங்கப்பூர் போலீஸ்

சிங்கப்பூர் போலீஸ்

தமிழில் பிரபு, கிஷோர் நடித்த யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ள இஷா, டி.வி.சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இப்போது வெப் தொடரில் சிங்கப்பூர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலரின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

லாக்டவுன் நேரத்தில்

லாக்டவுன் நேரத்தில்

ஸ்பெயினைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவல் கம்போஸ் குவால்லார் ( Manuel Campos Guallar) என்பவரை காதலித்து வருகிறார் இஷா. காதல் பற்றி எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில், லாக்டவுன் நேரத்தில் அவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தனது காதல் பற்றி கூறியிருந்தார். இதற்கிடையே அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு சினிமாவில் காட்பாதர் யாரும் இல்லை என்று கூறியிருந்தார்.

லட்சக்கணக்கில் லைக்ஸ்

லட்சக்கணக்கில் லைக்ஸ்

லாக்டவுன் நேரத்தில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அவ்வப்போது பிகினி, மற்றும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார். அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோஸும் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான லைக்ஸ்களையும் கமென்ட்ஸ்களையும் அள்ளி இருக்கிறது. ரசிகர்கள் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

உடல் மினுமினுப்பு

உடல் மினுமினுப்பு

ஒரு ரசிகை, உங்கள் புகைப்படங்களை பார்த்துக்கொண்டு வருகிறேன். எப்படி உங்கள் உடல் இப்படி மினுமினுப்பாக இருக்கிறது? என்று கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்துள்ள இஷா, நான் ஷூட்டிங்கின் போதும் ஒர்க் அவுட் புகைப்படங்கள் எடுக்கும்போதும் எண்ணெய் ஸ்பிரே அடித்துக் கொள்வேன், அவ்ளவுதான். மினுமினுப்பாகத் தெரியும் என்று கூறியிருக்கிறார்.

வெட்கம் எங்க போச்சு?

வெட்கம் எங்க போச்சு?

சிலர், அவரது அடுத்த படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிகினி உங்களுக்குத்தான் செமயா இருக்கு. அடிக்கடி இந்த மாதிரியான போட்டோ மட்டும் போடுங்க என்று கோரிக்கை வைத்துள்ளனர் சிலர். வேறு சிலர், ஏங்க உங்களோட வெட்கம் எங்க போச்சு? இப்படியா டிரெஸ் போடுவீங்க? என்று காட்டமாக கேட்டுள்ளனர். பட வாய்ப்பு கிடைக்கலைன்னா, இப்படியொரு பப்ளிசிட்டியா? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

அப்படியே இருக்கு

அப்படியே இருக்கு

இப்பதான் நீங்க கொஞ்சம் கொஞ்சமா எங்களை கொல்றீங்க என்று வழிந்திருக்கிறார் ஒருவர். மத்தவங்க சொல்றதை எல்லாம் கவனிக்காதீங்க. போட்டோ சூப்பரா இருக்கு என்று புகழ்ந்திருக்கின்றனர் சிலர். சிலர் வயசானாலும் உங்கள் இளமை அப்படியே இருக்கு என்று கூறியுள்ளார். நடிகை இஷா குப்தாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X