போட்டோ புடிக்க ஆள் இல்லையாம்மா.. யோகா செய்தபடியே செல்ஃபி.. பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
மும்பை: நடிகை இஷா குப்தா, யோகா செய்தவாறே எடுத்துள்ள செல்ஃபி புகைப்படத்தை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர்.
கடந்த 2007ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்த இஷா குப்தா, அதே ஆண்டு நடைபெற்ற சர்வதேச இந்திய அழகிப் போட்டியில் டைட்டிலை வென்று மகுடத்தை சூடினார்.
மாடல் உலகில் கலக்கி வந்த இஷா குப்தாவுக்கு பாலிவுட்டில், ஜானத் 2 படத்தின் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது.

ரொம்ப இஷ்டம்
செல்ஃபி எடுப்பது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பலரும் தங்கள் அழகை தாங்களே அலங்கரித்து செல்ஃபி புகைப்படங்களை வித விதமான போஸ்கள் கொடுத்து பிடித்து வருகின்றனர். மாடலிங் மற்றும் சினிமாவில் கலக்கி வரும் இஷா குப்தாவும் வெறித்தனமான செல்ஃபி பைத்தியம். பிகினியுடன் இவர் எடுத்த பல செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றியுள்ளன.

செம ஹாட்
ரிஜெக்ட்ஸ் எனும் வெப்சீரிஸில் ரெனி எனும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் இஷா குப்தா, கடந்த வாரம் வெளியான அந்த வெப்சீரிஸுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், இஷ குப்தாவின் கிளாமர் காட்சிகளும் பல இடங்களில் வைக்கப்பட்டு அவரது ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனி போட்டு இருக்கிறது.

அதுல மாஸ்டர்
எல்லாத்தையும் விட நடிகை இஷா குப்தாவுக்கு பிடித்தமான விஷயம் என்றால் அது யோகா செய்வது தான். தினமும் வித்தியாசமான யோகாக்களை செய்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக்குகிறார். பல பாலிவுட் பிரபலங்களே இவரது யோகா வித்தையை பார்த்து வாயை பிளந்து வருகின்றனர்.

என்றென்றும் அன்பு
சமீபத்தில் தனது அம்மா அப்பா லிப் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 'The Forever Kind' - என்றென்றும் அன்பு என்ற கேப்ஷனுடன் நடிகை இஷா குப்தா பதிவிட்ட ஹாட் லிப் கிஸ் புகைப்படம் சமூக வலைதளத்தில் சக்கைப் போடு போட்டது. ஆபாசமான கமெண்ட்டுகள் ஏதும் வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ள அவர், கமெண்ட்ஸ் ஆப்ஷனை ஆஃப் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்ஃபி யோகா
இந்நிலையில், இன்றைய ஹாட் அப்டேட்டாக நடிகை இஷா குப்தா செல்ஃபி எடுத்தபடியே யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘நம்புங்க நீங்களும் ஓம்' ஆகலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சமஸ்கிருத ஓம் மந்திரம் போல யோகா செய்து இஷா குப்தா அசத்தியிருந்த நிலையில், இப்படி வளைந்து உடலை முறுக்கியபடி செய்துள்ள யோகா போஸ் மெய்சிலிர்க்க வைக்கிறது.
Recommended Video

ஆள் இல்லையா
ரஸ்டம் நாயகியின் லேட்டஸ்ட் யோகா புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள், வாவ், சூப்பர், செம, என்னாம்மா வளையிறீங்க, சத்தியமா என்னால இப்படியெல்லாம் பண்ண முடியாது என பாராட்டி கமெண்ட்டுகள் குவிந்தாலும், மறு பக்கத்தில் என்னம்மா இஷா, போட்டோ எடுக்கக் கூட ஆள் இல்லையா என்றும், நான் வேணா வந்து போட்டோ எடுக்கட்டா என ஏடாகூடமாகவும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











