ஆங்காங்கே கிழிந்த சட்டையில் பிரபல ஹீரோயினின் ஏடா கூட போஸ்.. வைரலாகும் ஸ்டன்னிங் புகைப்படம்!

By

சென்னை: பிரபல நடிகை கிழிந்த சட்டையுடன் வெளியிட்டுள்ள ஏடா கூட போட்டோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது.

சினிமா தயாரிப்பாளர்கள், முடிவடைந்த தங்களது படங்களை ஓடிடி-யில் வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சை

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 21 லட்சத்து 53 ஆயிரத்து 10 ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது நாட்டில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 747 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 43 ஆயிரத்து 379 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

கடந்த 5 மாதமாக படப்பிடிப்பு இல்லாததால், நடிகர், நடிகைகள் வீட்டில் இருக்கின்றனர். இதனால் தங்கள் நேரத்தை சோசியல் மீடியாவிலும் ஒர்க் அவுட் செய்வதிலும் செலவழித்து வருகின்றனர். இந்த லாக்டவுன் நேரத்தில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இந்தி நடிகை இஷா குப்தா. அவ்வப்போது பிகினி, மற்றும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

இவர், தமிழில் பிரபு, கிஷோர் நடித்த யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஜன்னத் 2, ரஸ்டம், பாட்ஷாவோ, காமாண்டோ 2, ராஸ் 3 உட்பட பல பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். மாடலிங்கிலும் ஆர்வம் உள்ள இஷா குப்தா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடி இருக்கிறார். இப்போது REJCTX2 என்ற வெப் தொடரில் சிங்கப்பூர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

லாக்டவுன் நேரத்தில்

லாக்டவுன் நேரத்தில்

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலரின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். ஸ்பெயினைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவல் கம்போஸ் குவால்லார் என்பவரை காதலித்து வரும் இஷா, அவரை பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார். லாக்டவுன் நேரத்தில் அவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தான் அவரைக் காதலித்து வருவதாகச் சொல்லி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

டெனிம் டிரஸ்

டெனிம் டிரஸ்

இவர் இப்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. வழக்கமாக தனது ஒவ்வொரு போட்டோவுக்கும் கலக்கலான கேப்ஷன்கள் கொடுக்கும் இஷா, இதற்கு கேப்ஷன் எதையும் கொடுக்கவில்லை. இந்தப் போட்டோவில், ஆங்காங்கே கிழிந்திருக்கும் டெனிம் டிரஸ்சை அணிந்திருக்கிறார். இந்தப் போட்டோவுக்கும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர்.

ஹாட்டா ஏன் இருக்கீங்க?

ஹாட்டா ஏன் இருக்கீங்க?

செம ஹாட், லவ்லி, ஸ்டன்னிங், நீங்க வேற லெவல், ஆசம் என்றெல்லாம் தெரிவித்துள்ள நெட்டிசன்கள் அவர் அழகை தாராளமாக வர்ணித்தும் உள்ளனர். சிலர், அவரது தீவிரமான ரசிகன் என்றும் ஒரே ஒரு ரிப்ளை வேண்டும் என்று கெஞ்சியுள்ளனர். ஒருவர் நீங்க ஏன் ஹாட்டா இருக்கீங்க? என்று கேள்வி கேட்டிருக்கிறார். இன்னொருவர் சட்டை ரொம்ப வெளிறிப் போய் இருக்குதே என்று கலாய்த்துள்ளார்.

என்னாச்சு உங்களுக்கு?

என்னாச்சு உங்களுக்கு?

ஒரு நெட்டிசன், அடுத்தாப்ல என்ன படம் வரப்போகுது? என்று விசாரித்துள்ளார். ஒரு ரசிகர் சீரியசாக, என்னாச்சு உங்களுக்கு, இப்படி கிழிஞ்ச சட்டையை போட்டிருக்கீங்க? என்று கேட்டுள்ளார். இன்னொருவர் நீங்க இப்படி டிரெஸ் போடாட்டியும் அழகுதான். அதுக்காக இப்படி கிழிச்சுப் போட்டு அலையாதீங்க என்று கூறியுள்ளார். இஷாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X