மாலத்தீவில் பாபநாசம் பாப்பா.. சம்மர் ஹாலிடேவை எஸ்தர் அனில் எப்படி என்ஜாய் பண்றாங்க பாருங்க!

மாலத்தீவு: கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் சிறுமியாக நடித்து அனைவரையும் கவர்ந்த குழந்தை நட்சத்திரமான எஸ்தர் அனில் தற்போது 22 வயது நிரம்பிய பருவ மங்கையாக மாறிய நிலையில் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் மின்மினி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் முதல் ஹீரோயினாக வரை பல வருடங்களாக இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Esther Anil shares her Maldives holiday video just now


சோசியல் மீடியாவில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் எஸ்தர் அனில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கு எடுத்துக் கொண்ட வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாலத்தீவு பஞ்சாயத்து: நடிகைகள் தொடர்ந்து மாலத்தீவுக்கு 50% ஆஃபர் கொடுப்பதாக சொன்ன நிலையில் சென்று வந்த வீடியோ கால் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டனர். ஆனால், இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு செயல்படுவதாக மோடி லட்சத்தீவுக்கு சென்று அங்கே சுற்றுலாத்துறையை மேம்படுத்த புரமோஷன் செய்ததும் மாலத்தீவு அரசு ஆட்டம் கண்டது. பல நடிகைகள் எதுக்கு வம்பு என மாலத்தீவுக்கு செல்லாமல் தாய்லாந்து, இலங்கை என இந்த சம்மருக்கு சுற்றுலா சென்று வரும் நிலையில், மாலத்தீவில் எடுத்த வீடியோவை எஸ்தர் அனில் வெளியிட்டுள்ளார்.

எஸ்தர் அனில் படங்கள்: கடந்த 2010ல் மலையாளத்தில் வெளியான நல்லவன் படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தில் இளைய மகளாக நடித்து பிரபலமானார். அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் தமிழ் ரீமேக்கான பாபநாசம் உள்ளிட்ட படங்களிலும் எஸ்தர் அனில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

திருஷ்யம் 2: 2021 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் 2ம் பாகத்திலும் எஸ்தர் அனில் கல்லூரி மாணவியாக நடித்து கலக்கினார். தெலுங்கில் வெளியான அதன் ரீமேக் படத்திலும் இவரே நடித்தார். தமிழில் கமல்ஹாசன் பாபநாசம் 2 படத்தில் ஆர்வம் செலுத்தாத நிலையில், அந்த படம் உருவாகவில்லை. 2022 ஆம் ஆண்டு மஞ்சுவாரியர் நடித்த ஜாக் அண்ட் ஜில் படத்திலும் லீடு ரோலில் இவர் நடித்திருந்தார். விந்தியா விக்டிம் வெர்டிக்ட் படத்தில் கடந்த ஆண்டு நடித்த எஸ்தர் அனில் நடிப்பில் மின்மினி திரைப்படம் உருவாகி வருகிறது.


மாலத்தீவில் மஜா: சுற்றுலா பிரியையான எஸ்தர் அனில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடற்கரையை ஒட்டிய ரெசார்ட்டுக்கு தனது நண்பர்களுடன் படகில் சென்று பீச்சில் விளையாடும் காட்சிகளை கவர்ச்சிகரமாக வெளியிட்டுள்ளார். எஸ்தர் அனிலின் பீச் டிரெஸ்ஸை பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர். ஏகப்பட்ட லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

சம்மர் ஸ்பெஷல்: தொடர்ந்து நடிகைகள் சம்மர் ஹாலிடே மூடுக்கு சென்ற நிலையில், ஏகப்பட்ட கண்களுக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. எஸ்தர் அனிலும் தொடர்ந்து பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார் என்றே தெரிகிறது. இந்த ஆண்டு இதுவரை அவர் நடித்த எந்தவொரு படமும் வெளியாகவில்லை. கைவசம் மின்மினி படத்தை தவிர வேறு எந்தவொரு படங்களும் இல்லை என்றாலும் வாழ்க்கையை ஜாலியாக ரசித்து கொண்டாடி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X