GOAT: மோகனுக்கு ஜோடியாக நடித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. ஒரு சீன் என்றாலும் கலக்கிட்டாங்க கனிகா!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான இன்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
வழக்கம் போல குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பலரையும் விஜய்யின் கோட் படம் கவர்ந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி வருகிறது. கோட் படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி நடிப்பதை படக்குழு அறிவித்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமான நடிகை கனிகாவை நடிக்க வைத்ததை ரகசியமாகவே வெங்கட் பிரபு வைத்திருந்தார்.

கோட் படம் வெளியான நிலையில், அந்த படத்துக்காக தான் கஷ்டப்பட்டு நடித்த காட்சிகளை போட்டோக்களாக வெளியிட்டு படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை கனிகா.
நடிகை கனிகா: சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கனிகா. எதிரி, ஆட்டோகிராஃப், வரலாறு உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்த அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

மோகனுக்கு ஜோடி: ஏஜிஎஸ் தயாரிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் உருவான கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். பிரசாந்துக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். மோகனுக்கு ஜோடியாக கனிகா ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஆனால், அந்த ஒரு சீன் படத்துக்கு மிகவும் முக்கியமான காட்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பாம்ப் பிளாஸ்ட் சீன்: கோட் படத்தின் துவக்கத்தில் விஜய் விஜயகாந்த் போல மாறுவேஷத்தில் வந்து மோகனை பிடிக்க முயற்சி செய்வார். ஆனால், மோகன் மிஸ் ஆகிவிடுவார். அந்த ரயிலில் மோகன் உடன் சேர்ந்து அவரது மனைவி கனிகா மற்றும் மகன் ரயிலில் விஜய் டீமால் நடத்தப்படும் குண்டு வெடிப்பில் இறந்து விட்டதாக கூறப்படும். அந்த பாம்ப் பிளாஸ்ட் காட்சியில் நடித்த கனிகா முகம் வெந்து போனது போல மேக்கப் போட்டுக் கொண்டு எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்குகளை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சின்ன ரோலா இருந்தாலும்: கோட் படத்தில் சின்ன ரோலாக இருந்தாலும், வெங்கட் பிரபு கேட்டுக் கொண்ட உடனே ஓகே சொல்லி நடித்தேன். படம் தான் ரொம்ப முக்கியம். கதாபாத்திரங்களில் சின்ன ரோல், பெரிய ரோல் என்பதெல்லாம் ஒரு விஷயம் கிடையாது. வெங்கட் பிரபு மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் படம் பட்டையக் கிளப்புது என கனிகா போஸ்ட் போட்டுள்ளார்.
சிறு சிறு வேடங்களில்: கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் கனிகா நடித்திருந்தார். இந்த ஆண்டு வெளியான வெப்பன் படத்திலும் நடித்த அவர் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் சின்ன ரோலில் நடித்து கலக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











