சரக்கு பாட்டில்களுக்கு நடுவே போஸ்.. இது போட்டோஷூட்டா இல்ல டெய்லி ஹாபிட்டா? ஃபேன்ஸ் கிண்டல்!
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகளை கவர்ந்த சீரியலாகும். இதன் முதல் பாகம் முடிந்த நிலையில் இரண்டாம் பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. பலரையும் கவர்ந்திருக்கும் இந்த சீரியலில், ஜான்சி ராணியாக நடித்து பலரின் மனதில் இடம் பிடித்த காயத்ரி சரக்கு பாட்டிலுடன் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
அயலி வெப் தொடரில் நடித்த விஜே காயத்ரி, எதிர்நீச்சல் சீரியலில், வெற்றிலை போட்டுக்கொண்டு சிவந்த உதடுடன் வலம் வந்தார். சீரியல் சினிமாவிற்கு சென்ற இவர், ஃபேமிலி, காதலிக்க நேரம் இல்லை, குடும்பஸ்தன், ஒத்த ஓட்டு முத்தையா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பர் என அடுத்தடுத்து படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில், அயலியில் நான் நடித்ததை பார்த்து பலர் வாய்ப்புகள் கொடுக்கிறார்கள், சிலர் ஜான்சி ராணி கதாபாத்திரத்தை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். அயலி வெப் தொடர் எந்த அளவிற்கு எனக்கு ஒரு பெயரை வாங்கி கொடுத்ததோ, அதே போல, எதிர்நீச்சல் சீரியலும் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. பாலிவுட்டில் ஒரு வெப் தொடரில் நடித்து இருக்கிறேன் அது விரைவில் வெளியாக உள்ளது என்றார்.

நடிகை காயத்ரி: தற்போது காயத்திரி, சீரியல், சினிமா, வெப் தொடர் என படுபிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடித்த முருகேசன்பிளஸ்2 வெப் தொடர் ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. சினிமா, சீரியல் என படு பிஸியாக நடித்தாலும், சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, போட்டோஸ் மற்றும் ரீல்ஸ்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகை காயத்ரி. தனது தனித்துவமான ஃபேஷன் சென்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் லுக்குகளால் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புதிய புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களுடன் நெருக்கமாக தொடர்பில் இருப்பதும் இவரது சிறப்பாகும்.
சரக்கு பாட்டிலுக்கு நடுவே: இந்நிலையில், தற்போது காயத்ரி பகிர்ந்துள்ள சமீபத்திய போட்டோ ஒன்று இணையத்தில் பேசுபொருளாகி கலக்கி வருகிறது. அந்த படத்தில், சரக்கு பாட்டில்கள் நிறைந்த பகுதிக்கு நடுவே அமர்ந்து கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். மர்மமும் ஸ்டைலும் கலந்த அந்த லுக் ரசிகர்களின் கவனத்தை கொள்ளை கொண்டுள்ளது. ஃபோட்டோஷூட் லொக்கேஷன், பின்னணி, லைட்டிங் அனைத்தும் சேர்ந்து மிகவும் unique ஆக தோன்றியதால், அந்த போஸுக்கு ரசிகர்களிடமிருந்து லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேர்ஸ் குவிந்துகொண்டே இருக்கிறது.


Click it and Unblock the Notifications