வெறும் 2 ஆயிரம் சம்பளம்.. சினிமாக்கு ஏன்டா வந்தோம்னு யோசிச்சிருக்கேன்.. கனிகா மனம் திறந்த பேட்டி!

சென்னை: ஃபைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர், எதிரி, ஆட்டோகிராப் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்து தல அஜித்துடன் ஜோடி போட்ட நடிகை என பெயர் எடுத்துள்ள கனிதா, தனது சினிமா வாழ்க்கை குறித்தும், முதல் சம்பளம் குறித்தும் அளித்துள்ள பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிப்பு மட்டுமல்லாமல் ஜெனிலியா, சதா, ஷ்ரேயா போன்ற நடிகைகளுக்கு பின்னணி குரலும் கனிகா கொடுத்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் எனபவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது எதிர் நீச்சல் என்ற தொடரில் கனிகா நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கனிகா தனது சினிமா பயணம் குறித்து பேசி உள்ளார்.

Ethirneechal serial actress Kaniha shared about her first salary

அஜித்திற்கு ஜோடி: அதில், அஜித் எதையும் முகத்திற்கு நேராக சொல்லக்கூடிய மனிதர், ஒளித்து மறைத்து அவர் எதையும் இதுவரை பேசியது இல்லை. அவருடன் வரலாறு படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அஜித் ஒரு சிறந்த மனிதர் என்றார். மேலும், தளபதி விஜய்யுடன் நான் இதுவரை நடித்தது இல்லை, அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உண்மையில் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

பல முறை யோசித்து இருக்கிறேன்: தொடர்ந்து பேசிய அவர், நான் சினிமாவிற்கு ஏன் வந்தேன் என்று ஒரு முறை நினைத்து இருக்கிறேன். ஏன் என்றால் எனக்கு டான்ஸ் ஆட அவ்வளவாக வராது, மலையாள படம் ஒன்றில் எனக்கு ஷோபனா மாதிரி டான்ஸ் ஆடும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அப்போது நான், ஏன்டா நடிக்க வந்தோம் என்று நினைத்து வருத்தப்பட்டேன். அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல நன்றாக நடனமாட கற்றுக்கொண்டேன் என்றார்

என் முதல் சம்பளம்: தொடர்ந்து, பேசிய அவர் நான் முதல் முதலில் வாங்கிய சம்பளம் வெறும் 2 ஆயிரம் ரூபாய் என்றும் அப்போது தான் எல் அண்டு டியில் வேலை பார்த்ததாகவும் தெரிவித்தார். மேலும், தனது மகன் தீவிர மாதவன் ரசிகன் என்றும் அந்த பேட்டியில் கனிகா கூறியிருந்தார். நடிகை கனிகா தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X