எங்க வீட்டில் இதுதான் ரூல்ஸ்.. அதை பிரேக் பண்ணா அவ்வளவு தான்.. ஜோதிகா சொன்ன அந்த விஷயம்!

சென்னை: தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நடிகை என்று பெயர் எடுத்த நடிகை ஜோதிகா, மும்பையில் செட்டிலாகி அடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 10ந் தேதி வெளியான நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சூர்யாவின் வீட்டில் இருக்கும் ரூல் பற்றி கூறியுள்ளார்.

நடிகை ஜோதிகா, ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர், தமிழ், இந்தி, மலையாளம் , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள இவரின் தனித்துவமான நடிப்பும், துரு துருப்பான பார்வையும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று. குறிப்பாக விஜய்யுடன் இவர் சேர்ந்து நடித்த குஷி திரைப்படம் இன்றைய தலைமுறைக்கும் பிடித்தமான படமாக உள்ளது.

Evergreen actress Jyothika spoke about the rule in her family in an interview

சூர்யா மீது காதல்: இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இந்த படத்தைத் தொடர்ந்து, உயிரிலே கலந்தது, மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், ஜூன் ஆர் என அடுத்தடுத்து பலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்த ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.

ரீ என்ட்ரி: திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று சூர்யாவின் அப்பா சிவக்குமார் போட்ட கட்டளையால் படத்தில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, அவரின் அனுமதியுடன் 36 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படத்தை தொடர்ந்து, ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜோ, மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கணிசமான வசூலை அள்ளியது. இதைத்தொடர்ந்து இந்தி திரைப்படமான ஷைத்தான் திரைப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

குடும்பத்தில் ரூல்: தற்போது,ஜோதிகா, பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ஸ்ரீகாந்த் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் 10ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், ஜோதிகா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எங்கள் குடும்பத்தில் ஒரு ரூல்ஸ் இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்கள் ஒரு செட், ஆண்கள் ஒரு செட்டாக இருப்போம். ஆனால் சூர்யா இரண்டு பேருக்கும் நடுவில் இருப்பார்.

கார்த்தி, சூர்யா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பார்கள், சிவக்குமார் அப்பா ஸ்பீச் கொடுப்பதில் பிஸியாக இருப்பார். யார் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், மதிய உணவும் அல்லது இரவு டின்னரை அனைவரும் சேர்ந்து தான் சாப்பிட வேண்டும் என்பது தான் அந்த ரூல். இப்படி இருந்தால் தான், பாசம் நீடிக்கும் என்று, மாமா எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை ப்ரேக் பண்ணா அவ்வளவு தான் என்று ஜோதிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X