கல்யாணமாகி விவாகரத்தும் ஆகிடுச்சு.. தினம் தினம் என்னை பற்றிய கிசுகிசு தான்.. சாக்ஷி அகர்வால் வேதனை!

சென்னை: பெரிய ஐடி கம்பேனி வேலையை விட்டு, சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற கனவோடு சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தினம் தினம் என்னை பற்றி ஏதோ ஒரு கிசு கிசு வருகிறது என வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

சென்னையில் தனது படிப்பை முடித்த சாக்ஷி அகர்வால், தமிழ் சினிமாவில் அட்லி இயக்கிக் ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன துணை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, காலா படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த இவர், கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார்.

Sakshi Agarwal Bigg Boss Vijay tv

பிக் பாஸ் சீசன்3: இதையடுத்து,பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என கணக்கு போட்டு வந்த சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் வீட்டிற்குள் குட்டி குட்டி பவுசருடன் வலம் வந்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் தமிழில் இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபுதேவாவின் பகீரா என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்தார். இன்னும் சில கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

தினம் தினம் கிசுகிசு: சாக்ஷி அகர்வால் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த போது எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அவரை விவாகரத்து செய்து இப்போது நியூசிலாந்தில் வசிக்கிறார் என்றேல்லாம் கிசுகிசு வந்தது. அது மட்டும் இல்லாமல் இதுதான் திருமண போட்டோ ஒரு போட்டோவும் மாபிஃங் செய்து வெளியானது. இப்படி தினம் தினம் என்னை பற்றி ஏதாவது ஒரு கிசு கிசு வந்துகொண்டே இருந்தது. அதை எல்லாம் பார்க்கும் போது என்னடா இது என்று வேதனையா இருக்கும் என்று பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X