அது என் தனிப்பட்ட விஷயம்.. இதை ஏன் ஹீரோக்களிடம் கேட்கிறதில்லை.. பிரபல ஹீரோயின் திடீர் கோபம்!

By

சென்னை: இந்த விஷயம் பற்றி ஹீரோக்களிடம் ஏன் கேட்பதில்லை என்று பிரபல நடிகை தமன்னா கூறியுள்ளார்.

Recommended Video

Tamannaah Bhatia boredom Video | Exercise, Cooking, Trend Setting • MPL Gaming App

தமிழில், கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. இந்தப் படம் அதிகம் கவனிக்கப்படவில்லை என்றாலும் அழகான இரண்டு ஹீரோயின்களை தந்த சினிமா இது.

ஒருவர் இலியானா, இன்னொருவர் தமன்னா. இந்தப் படத்தைத் தொடர்ந்து, வியாபாரி, கல்லூரி, அயன், கண்டேன் காதலை, பையா, வீரம், பாகுபலி 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்தார் தமன்னா.

சீட்டிமார்

சீட்டிமார்

இப்போது, நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதை ராம் சுப்ரமணியன் என்பவர் இயக்கியுள்ளார். தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில், கபடி பயிற்சியாளராக நடித்து வருகிறார். இவர் தெலங்கானா மாநில கபடி பயிற்சியாளராகவும் ஹீரோ கோபிசந்த் ஆந்திர மாநில கபடி பயிற்சியாளராகவும் நடித்து வருகின்றனர். கொரோனா பிரச்னை முடிந்து இதன் ஷூட்டிங் தொடங்கும்.

ரவிதேஜா

ரவிதேஜா

இந்நிலையில் இவர் பிரபல தெலுங்கு ஹீரோ ரவிதேஜா படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்ததாகவும் அதிக சம்பளம் கேட்டதால் அவருக்குப் பதிலாக வேறு ஹீரோயினைத் தேடி வருவதாகவும் தெலுங்கு திரை உலகில் கூறப்பட்டது. இதுபற்றி பல மீடியாவில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இது பற்றிய கேள்விக்குப் பதிலளித்துள்ள தமன்னா, கூறியதாவது:

அவசியமில்லை

அவசியமில்லை

கடந்த பிப்ரவரி மாதம் அந்த பட நிறுவனம் சார்பில் எனது தரப்பில் பேசப்பட்டது. அதற்குள் கொரோனா லாக்டவுன் வந்துவிட்டது. இப்போது பாதுகாப்புதான் முக்கியம். அதனால் அதுபற்றிய பேச்சுவார்த்தை நடக்கவில்லை. ரவிதேஜா படத்தை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. வாய்ப்பு கிடைத்தால் இன்னும் பத்து படங்கள் கூட அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.

தனிப்பட்ட முடிவு

தனிப்பட்ட முடிவு

ஆனால் சம்பளம் என்பது அந்தந்த நடிகர்களின் தனிப்பட்ட முடிவு. அதை தீர்மானிப்பதும், ஏற்பதும் நிராகரிப்பதுமான முடிவு அவரிடம்தான் இருக்கிறது. நடிகைகள் சம்பள விஷயத்தில் இதுபோன்ற ஒருதலைப்பட்ச கணிப்புகளை அழிக்க வேண்டும். இந்த கேள்வி நடிகைகளிடம் மட்டுமே அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏன் நடிகர்களிடம் கேட்கப்படுவதில்லை.

எனக்குப் புரியவில்லை

எனக்குப் புரியவில்லை

ஒவ்வொரு படத்துக்கும் ஹீரோவை போல ஹீரோயினும் தேவைதான். அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெயர் ஏன் நடிகைகளுக்கு கிடைக்கக் கூடாது? குறிப்பாக என்னைப் பற்றி இதுபோன்ற கற்பனையான கதைகளை அதிகமானவர்கள் சொல்லி வருகிறார்கள். இது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. இவ்வாறு நடிகை தமன்னா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X