பார்வதி திருவோத்து மார்பில் அடித்த நபர்.. ரயில் நிலையத்தில் நடந்த அசிங்கம்.. இப்படியும் நடந்ததா?

திருவனந்தபுரம்: நடிகை பார்வதி திருவோத்து மலையாளம் மற்றும் தமிழில் சிறந்த நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் அவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வந்தது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும்; விக்ரம் நடிப்புக்கு எப்படி நல்ல பெயர் கிடைத்ததோ அதேபோல் பார்வதிக்கும் கிடைத்தது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகச்சிறந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் பார்வதி திருவோத்து. அவர் அறிமுகமான பூ படத்திலேயே கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். சினிமாவை நுணுக்கமாக அணுகுபவர்கள் பார்வதியின் நடிப்பை வெகுவாக பாராட்டுவார்கள். அந்தப் படத்துக்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக மரியான் படத்தில் நடித்தார். பொதுவாக தனுஷ் மிகச்சிறந்த நடிகர்; அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுவார் என்றுதான் நிலைமை இருக்கும். ஆனால் அப்படத்திலோ நிலைமை தலை கீழ்.

ஸ்கோர் செய்த பார்வதி: பார்வதி அந்தப் படத்தின் ஒவ்வொரு சீனிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். தொலைபேசியில் பேசும்போது அழுவது, தனுஷுடனான பல காதல் காட்சிகள் என பட்டையை கிளப்பியிருந்தார். மரியான் படத்துக்கு பிறகு கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றெல்லாம் கணிக்கப்பட்டது. ஆனால் கதை தேர்வில் தெளிவாக இருக்கும் அவர்; தன்னுடைய கேரக்டருக்கு எந்த படம் முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்.

Every Girl Is Taught to Be Alert Parvathy Thiruvothu Opens Up About Childhood Trauma
Photo Credit:

போல்டான ஆள்: நடிப்பு ஒருபக்கம் இருக்க; மறுபக்கம் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடக்கூடியவது. மலையாளத்தில் பெரும் புயலை கிளப்பிய ஹேமா கமிஷன் விவகாரத்தில்கூட ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கத்தையும் அவர் எதிர்த்திருந்தார். யாருக்கும், எதற்கும் அஞ்சாமல் இதுபோன்று கருத்துக்களை சொல்வதால் அவ்வப்போது பிரச்னைகளையும், சங்கடங்களையும் அவர் சந்திப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வதியின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் அவர் கொடுத்த பேட்டி சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளன. அந்தப் பேட்டியில் அவர், "சிறு வயதில் நான் என்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் ரயில் நிலையம் ஒன்றில் நின்றுகொண்டிருந்தேன். நான் அப்போது ரொம்பவே சின்ன பெண். திடீரென ஒருவர் வந்து எனது மார்பில் அடித்துவிட்டு ஓடிவிட்டார். அது வெறும் தொடுதல் மாதிரியெல்லாம் இல்லை. கடுமையான வலியை கொடுத்தது. அன்று என்ன நடந்தது என்றே புரியவில்லை. பயந்துவிட்டேன்.

இப்படித்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்: சாலையில் நடக்கும்போது எப்போதும் ஆண்களின் கைகளை பார்த்துதான் நடக்க வேண்டும் என எனது அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார். எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். ஒரு தாய் தனது மகளுக்கு இப்படி ஒன்றை கற்றுக்கொடுக்கும் நிலைமைதான் நிலவுகிறது. இந்த சூழலை கொஞ்சம் நினைத்து பாருங்கள்" என்றார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X