“நா என்ன தப்பு பண்ணினேன்.. அதை நினைத்து தினமும் இரவு கதறினேன்”.. படவிழாவில் மேடையிலேயே அழுத நடிகை!

அவனே ஸ்ரீமன்நாராயணா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மேடையிலேயே கதறி அழுதார் நடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா.

ஐதராபாத்: நடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா விழா மேடையில் உடைந்து அழுதது அனைவரையும் உருக வைத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள படம் அவனே ஸ்ரீமன்நாராயணா. தமிழில் இப்படம் ஜனவரி 3ம் தேதி வெளியாகிறது.

Every night I used to cry, says actress Shanvi Srivatsava

புதுமுக இயக்குனர் சச்சின் இயக்கியுள்ள இந்த படத்தில் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லவ்லி, அட்டா, ரவுடி ஆகிய படங்களில் தெலுங்கு படங்களில் நடித்த ஷான்வி ஸ்ரீவத்சவா நடித்துள்ளார்.

அவனே ஸ்ரீமன்நாராயணா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. விழாவில் பேசிய நடிகை ஷான்வி, "நான் பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் இருக்கலாம். நான் சரியாக நடிக்காமல் இருக்கலாம். அதற்காக எனக்கு ஆதரவு அளிக்காமல் இருக்காதீர்கள். ஊடக நண்பர்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

ராம் கோபால் வர்மாவின் ரவுடி படத்தில் நடித்தப்பிறகு தெலுங்கில் எனக்கு படங்களே அமையவில்லை. சுமார் ஒன்றரை ஆண்டுகள் நான் வேலையே இல்லாமல் தவித்தேன். அதை நினைத்து தினமும் இரவு கதறி அழுவேன்.

நான் என்ன தவறு செய்தேன் என எனக்கு தெரியவில்லை. என்னை நான் நிரூப்பிக்க அவனே ஸ்ரீமன்நாராயணா படம் மூலம் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது", எனக் கூறியவர் மேடையிலேயே உடைந்து அழுதார். அதைப்பார்த்த அனைவரும் உருகினர். பின்னர் பலத்த கரகோஷங்கள் எழுப்பி ஷான்வியை ஆற்றுப்படுத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X