''அம்மா என்றால் அன்பு''… ஜெயலலிதாவின் இனிய பாடல்கள்!
ஒரு நடிகையாக, முதல்வராக ஜெயலலிதாவைத் தெரியும். அவர் ஒரு நல்ல பாடகியாகவும் இருந்திருக்கிறார். அம்மா என்றால் அன்பு... இந்தப்பாடல் ஜெயலலிதா பாடிய பாடல் அனைவருக்கும் பிடித்தமானது.
ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் கோமளவள்ளி, ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா' ஆனார்.

செல்ல அம்மு
ஜெயா,ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு'. அ.தி.மு.க -வினர் அனைவருக்கும் `அம்மா'!

இனிய குரல்வளம்
நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள ஜெயலலிதா திரைப்பட உலகில் ஒரு முக்கிய அறிவாளியாக அடையாளம் காணப்பட்டார். அந்த நாட்களில் அவருக்குக் கவர்ச்சியுடன் இனிய குரல்வளமும் இருந்தது. சில திரைப்படங்களில் சொந்தக்குரலில் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

அம்மா என்றால் அன்பு
அடிமைப்பெண் படத்தில் கவிஞர் வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலைக் கேவி மகாதேவன் இசையில் ஜெயலலிதா தனியாகப் பாடியிருக்கிறார்.

சூரியகாந்தி படத்தில்
இவர் பாடி மிகவும் பிரபலமான பாடல் "நானென்றால் அது அவளும் நானும்". சூரியகாந்தி படத்தில் முக்தா ஸ்ரீனிவாஸனின் இயக்கத்தில் வந்த இந்தப் பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்துபாடியிருப்பார்.

ஸ்டைலான உச்சரிப்பு
இந்தப் பாடலில் அவரது "ஸ்ஷ்டைலான" ஆங்கில உச்சரிப்பு அந்த காலங்களில் தமிழ்த் திரையுலகிற்குப் புதியது. இந்தப் பாடலில் முத்துராமனுக்காகப் பாடும் எஸ்.பி குரலில் அசாத்தியப் பணிவையும், ஜெயலலிதாவின் குரலில் அலட்சியத்தையும் கர்வத்தையும் எளிதாகக் காட்டியிருப்பார்கள்.

ஓ மேரே தில்ரூபா
எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வந்த சூரியகாந்தி படத்தில் டி.எம். சௌந்தர்ராஜனுடன் ஜெயலலிதா ஒ மேரே தில்ரூபா என்ற இன்னொரு பாடலையும் பாடியிருக்கிறார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன்…
வைரம் படத்தில் கண்ணதாசன் எழுதிய இரு மாங்கனி போல் என்ற பாடலை,எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடியுள்ளார். இதில் ஜெயலலிதாவின் குரலில் இருக்கும் தனி குழைவு ரசிகர்களை கவரும்.

பிடித்த பாடல்
ஜெயலலிதா பாடிய பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், ஒரு சினிமா ரசிகையாக ஜெயலலிதாவிற்கு பல பாடல்கள் பிடிக்குமாம். அதுவும் சோரி சோரி படத்தில் வரும் ஆஜா சனம் மதுர் சாந்தினி மே ஹம் என்ற பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஒருமுறை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பாடியே காண்பித்துள்ளார் ஜெயலலிதா.


Click it and Unblock the Notifications











